வனிதா, பரணியை தொடர்ந்து BB அல்டிமேட்டில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட். யார் யாருன்னு தெரியுமா?

0
917
biggbos
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்தியாவில் முதன் முதலில் இந்தி மொழியில் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் பிற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Bigg Boss Tamil OTT season to stream on Disney+ Hotstar from THIS date |  Ott News – India TV

இந்த ஐந்து வருடங்களாகவும் கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வருடமும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதுவரை இல்லாத பல மாற்றங்களை இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 5:

ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களை களமிறக்கி இருந்தார்கள். பல போட்டிகள், சவால்கள் உடன் நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஞாயிற்று கிழமை ப்ரம்மாண்டமாக நடந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை பவானி ரெட்டியும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து உள்ளார்கள். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இருப்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Bigg Boss Ultimate Promo, Oviya And Vanitha Are Confirmed Contestants?

பிக் பாஸ் அல்டிமேட்:

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. கடந்த ஆண்டு தான் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. அதாவது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். இந்நிலையில் தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள். மேலும், தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

-விளம்பரம்-
Breaking! The first official promo of Bigg Boss Ultimate featuring Kamal  Haasan was released - Tamil News - IndiaGlitz.com

போட்டியாளர்களின் பட்டியல்:

ஆனால், ஏற்கனவே பிக் பாஸ்ஸில் 5 சீசனில் பட்டத்தை வென்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு இல்லை. அதே போல இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் சில தினங்களுக்கு முன் நடந்த கிராண்ட் பினாலேவில் இந்நிகழ்ச்சி குறித்து கமலஹாசன் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் ப்ளஸ்ஸில் பார்க்கலாம். அதோடு இந்த நிகழ்ச்சியின் புரோமோ கூட வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த போட்டியாளர்களின் பட்டியல் இதோ,

வனிதா

பரணி

ஜூலி

சுரேஷ் சக்ரவர்த்தி

சினேகன்

அபிராமி

சுஜா வருணி

ஷாரிக்

தாடி பாலாஜி

அனிதா சம்பத்

பாலாஜி முருகதாஸ்

Breaking! The first official promo of Bigg Boss Ultimate featuring Kamal  Haasan was released - Tamil News - IndiaGlitz.com

ஷெரின் என மொத்தம் 12 பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் பாதிப்பேருக்கு மேல் ஐந்து சீசன் களிலும் பற்ற வைத்தவர்களே இருக்கிறார்கள். கண்டிப்பா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு பக்கா என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இது எப்போ ஒளிபரப்ப போகிறார்கள்? என்ற தகவல் வெளியாகவில்லை. இதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement