பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறிய நபர் – சிம்பு வெளியேற்றப் போகும் முதல் போட்டியாளர் இவர் தான்.

0
573
biggboss
- Advertisement -

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 வாரத்தை நெருங்கி இருக்கிறது. முதல் நாளே 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுரேஷ் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

கடந்த வாரம் No எலிமினேஷன் :

மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். கடந்த வாரம் வனிதா திடீரென்று வெளியேறியதால் எலிமினேஷன் எதுவும் நடைபெறவில்லை.

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நாமினேஷன் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மூன்று பேரை பேரை நாமினேட் செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

தாமரை – சினேகன், தாடி பாலாஜி, அனிதா
சினேகன் – தாமரை, சுருதி, அனிதா
சுருதி – அபிராமி, தாடி பாலாஜி, ஜூலி
நிரூப் – ஜூலி, அபிராமி, தாடி பாலாஜி
அனிதா – தாடி பாலாஜி, அபிராமி, ஜூலி
அபிராமி – அனிதா, சுருதி, நிரூப்
தாடி பாலாஜி – தாமரை, அனிதா, சுருதி
சுரேஷ் – தாடி பாலாஜி, சினேகன், சுருதி
ஜூலி – சுருதி, அனிதா, நிரூப்
சதிஷ் – தாமரை, தாடி பாலாஜி, ஜூலி
பாலாஜி – அனிதா, சுருத, சினேகன்

இந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் :

மேலும், இந்த வார டிரெண்டிங் பிளேயர் யாரும் இல்லை. இந்த வார கேப்டன் பாலாஜி முருகதாஸ் தவிர இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் தாடி பாலாஜி, சுருதி, அனிதா, ஜூலி, அபிராமி, சினேகன், தாமரை. இதில் இருந்து இந்த வாரம் யார் வெளியே போகிறார்கள்? என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் தாடி பாலாஜி வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Triple எலிமினேஷன் :

தாடி பாலாஜி கடந்த வாரமே நாமினேஷனில் இடம்பெற்றார். மேலும், கடந்த வாரம் இவர் தான் குறைவான வாக்குகளை வாங்கி இருந்தார். ஆனால், கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் எப்படியோ தப்பித்துவிட்டார் பாலாஜி. மேலும், இந்த வாரம் மூன்று எலிமினேஷன் இருக்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை அது உண்மை என்ற பட்சத்தில் பாலாஜியை தொடர்ந்து சினேகன் மற்றும் அபிராமி அல்லது சுருதி வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement