பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் எலிமினேஷன், யார் தெரியுமா ? (இவர செம கண்டன்ட் தருவாரே)

0
654
raja
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த ஐந்து வருடங்களாக தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஐந்து வருடமும் கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் முதலிடத்தை ராஜு, இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்து இருந்தார்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டுமே என்ற கவலையில் ரசிகர்கள் இருந்த போது விஜய் டிவி புதிய கதைக் களத்துடன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அறிவித்திருந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு.

-விளம்பரம்-

இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நிறைவடைந்த முதல் வாரம் :

மேலும், இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை, சுரேஷ் ஷாரிக், ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது.

முதல் நாமிநேஷன் :

பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் வனிதா ஒருத்தரை விட்டு வைக்கவில்லை புரட்டி எடுத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் அடைந்து விட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து முதலில் எலிமினேட் ஆக போகிறவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போதிலும் ஞாயிற்றுக்கிழமையில் தான் எலிமினேட் செய்து வெளியில் அனுப்புவார்கள்.

-விளம்பரம்-

வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி :

இதனால் கமலஹாசன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலந்துகொள்ளும் சூட்டிங் நடைபெறும். சில நேரங்களில் சனிக்கிழமையே இரண்டு நாள் எபிசோடுகள் எடுக்கப்படும். அதேபோல எலிமினேட் ஷூட்டிங் இன்று காலை தொடங்கியது. இதில் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகிய எட்டுபேர் வெளியேறுவதற்காக நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் இவர்களில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி எவிக்ஷன் ஆகி பிக்பாஸில் இருந்து முதலாக வெளியேறி இருக்கிறார்.

ரசிகர்கள் ஏமாற்றம் :

மேலும், சுரேஷ் வெளியேறிய எபிசோடு இன்று ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டவர். தற்போது அல்டிமேட்டில் கலந்து இருந்தார். கடந்த ஒரு வாரத்தில் சுரேஷ் பெரிதாக நிகழ்ச்சியில் ஈடுபாடு விளையாடவில்லை. அதுமட்டுமில்லாமல் நடந்து முடிந்த டாக்கில் கொளுத்திப் போடுபவர் என்ற பட்டம் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வெளிய வந்த உடனே ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement