‘வெற்றி என்பது இது தான்’ – பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் தனது புகைப்படத்தை பதிவிட்டு ஜூலி போட்ட முதல் பதிவு.

0
720
julie
- Advertisement -

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 11 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இதில் வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு தாமாகவே வெளியேறி இருந்தார். அதே போல நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்த சுரேஷ் சக்ரவர்த்தியும் உடல் நல பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-31.png

கடந்த வாரம் இறுதி நாமினேஷன் என்பதால் அனைவரும் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் பல தனியார் சமூக வலைதள பக்கத்தில் நடைபெற்று வந்த வாக்கெடுப்புகளில் அபிராமிக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அனைவரும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் அபிராமி திடீரென்று வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

கெட்ட பெயரை துடைத்த ஜூலி :

இதனால் பாலாஜி, ஜூலி, ரம்யா பாண்டியன், நிரூப், தாமரை ஆகிய 5 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுஇருந்தனர். இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீஸனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். இப்படி ஒரு நிலையில் அபிராமியை தொடர்ந்து ஜூலி வெளியேற்றப்பட்டு இருந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. . ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலி பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டார். ஆனால், அந்த சீசனில் இவரது பெயர் கடுமையாக டேமேஜ் ஆனது.

This image has an empty alt attribute; its file name is image-32.png

அதிலும் குறிப்பாக ஜூலி அந்த சீசனில் ஓவியாவுடன் அடிக்கடி பிரச்சனை செய்ததாலேயே இவரது பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த போதிலும் இவர் சமுக வலைதள பக்கத்தில் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். கிட்டதட்ட 5 ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் பல விதமாக நெகடிவ் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த ஜூலி மீண்டும் பிக் பாஸில் கலந்துகொண்ட போது பெரும் கேலிக்கு உள்ளாகினார்.

-விளம்பரம்-

ரசிகர்கள் ஏமாற்றம் :

ஆனால், தன் பெயரை சரி செய்துகொள்ளவும் உண்மையில் தான் யார் என்பதை மக்களுக்கு எடுத்துகாட்டவும் தான் பிக் பாஸுக்கு வந்ததாக சொன்னார் ஜூலி. அதே போல பிக் பாஸ் அல்டிமேட் மூலம் தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்தார். ஜூலி கண்டிப்பாக டாப் 3 இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்து இருந்தது.

ஜூலியின் பதிவு :

அபிராமியும் சரி, ஜூலியும் சரி பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் எந்த ஒரு பதிவையும் போடவில்லை. இப்படி ஒரு நிலையில் ஜூலி, தனது வெளியேற்றத்திற்கு பின் முதல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ”வெற்றி என்பது நீங்கள் இறுதியில் பெறுவதை விட குறைவாக இருக்கலாம். ஆனால், அந்த பயணத்தில் நீங்கள் என்னவாக மாறி இருக்கிறீர்கள் என்பதே பெரிது” என்று பதிவிட்டுள்ளார்.

வெளியேறிய ரம்யா :

ஜூலி வெளியேறியதை தொடர்ந்து ரம்யா, பாலாஜி, நிரூப், தாமரை ஆகிய நான்கு பேர் மட்டும் இருந்த நிலையில் இவர்கள் 4 பேரும் இறுதி போட்டிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் 3 பேர் மட்டுமே பைனலுக்கு தகுதி பெற்று இருக்கின்றனர். இதில் யார் வெற்றி பெற போகிறார் என்பது நாளையே தெரியவரும்.

Advertisement