ஓவியா Spray, வனிதாக்கு வாத்திக்குச்சி, அடுத்த போட்டியாளர் யார்தெரியுமா ? ஹாட்ஸ்டார் வெளியிட்ட அடுத்த சூசக பதிவு.

0
285
oviya
- Advertisement -

இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்தியாவில் முதன் முதலில் இந்தி மொழியில் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் பிற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், ஒவ்வொரு வருடமும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
biggbos

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதுவரை இல்லாத பல மாற்றங்களை இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஞாயிற்று கிழமை ப்ரம்மாண்டமாக நடந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை பவானி ரெட்டியும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து உள்ளார்கள்.

- Advertisement -

புத்தம் புது பிக் பாஸ் நிகழ்ச்சி:

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷி ஆகி விட்டார்கள். கடந்த ஆண்டு தான் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. அதாவது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள். மேலும், தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

Bigg Boss Ultimate Promo, Oviya And Vanitha Are Confirmed Contestants?

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்:

இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் ப்ளஸ்ஸில் பார்க்கலாம். அதோடு இந்த நிகழ்ச்சியில் வனிதா, பரணி, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத் என பல பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோவும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு போட்டியாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் அல்டிமேட்டில் புது போட்டியாளர் அறிமுகம்:

அது யார் என்றால், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. மேலும், அந்த டுவிட்டர் பக்கத்தில் கஞ்சா கருப்பு கன்பெக்ஷன் ரூமுக்கு சென்றபோது நாமினேஷன் என்றால் என்ன? என்று கேட்டிருப்பார். இந்த வசனத்தை தான் ஹாட்ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து கஞ்ச கருப்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளது. தற்போது இந்த ட்விட் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

bigg boss Ganja Karuppu - YouTube

கஞ்சா கறுப்பு திரை பயணம்:

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் கஞ்சா கறுப்பு. இவர் மதுரையை சேர்ந்தவர். இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக கறுப்பு நடித்திருந்தார். இதனால் அவரை அனைவரும் கஞ்சா கருப்பு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement