அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து பல மொழிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ரசிகர்கள் சோகத்தில் இருந்த சமயத்தில் தான் ஒரு புது விதமான பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிவித்து உள்ளது.
ஹிந்தியில் ஒளிபரப்பான புது பிக் பாஸ்:
அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள். இதன் மூலம் பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். மேலும், தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 4 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். இதில் ஐந்து சீசன்களிலும் வெற்றி பெற்ற நபர்கள் கலந்து கொள்ள கூடாது என்று அறிவித்து இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6. 30 மணிக்கு கோலாகலமாக துவங்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர்கள் சமூக வலைதளத்தில் அடிபட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள்:
இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளாராக சினேகன், ஜூலி, வனிதா, அபிராமி, சுரேஷ் சக்ரவர்த்தி, தாடி பாலாஜி, அனிதா ஆகியோர் உறுதியாகி இருக்கிறது. அதன்படி இதுவரை 7 போட்டியாளர்கள் உறுதி ஆகி உள்ளார்கள். மேலும், நாளை மீதமுள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல் நின்று தொகுத்து வழங்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சியில் வரும் மற்ற போட்டியாளர்கள்:
அதில் உறுதி செய்யப்பட்ட ஏழு போட்டியாளர்கள் மட்டும் காண்பித்திருக்கிறார்கள். மீதம் மற்ற போட்டியாளர்களை பற்றி தகவல் வெளியாகவில்லை. அதோடு ப்ரோமோவில் போட்டியாளர்கள் தங்கும் பிக் பாஸ் வீடு காட்டப்பட்டது. அதே செட் தான். ஆனால், பெயிண்ட், டிசைன் ஒர்க் மட்டும் வேற மாதிரி இருக்கிறது. தற்போது இந்த ப்ரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், மற்ற போட்டியாளர்களாக யார் யார் வரப்போகிறார்கள்? என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகிறார்கள்.