டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 வாரத்தை நெருங்கி இருக்கிறது. முதல் நாளே 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த்னர். மேலும், இந்த சீசனில் ஓவியா கலந்துகொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.
அதே போல ஓவியாவின் என்ட்ரிக்கு தான் ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அவர் இதுவரை வெளியிடவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் அடுத்த Wild Card எண்ட்ரியாக சீசன் 3யின் ட்ரெண்டிங் பிளேயர்களில் ஒருவரான லாஸ்லியா கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீசன் 3 பங்கேற்ற லாஸ்லியா மூன்றாம் இடத்தை பிடித்தார்.
லாஸ்லியாவிற்கு குவிந்த வாய்ப்பு :
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. மேலும், தன் முதல் படத்திலேயே ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் நடித்த பாக்கியம் இவருக்கு கிடைத்தது. ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது. அதே போல பிக் பாஸுக்கு பின் தொடர்ந்து கமிட் ஆன படங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும், சமீப காலமாக லாஸ்லியா எந்த படத்திலும் கமிட் ஆனதாக தகவல் வெளியாகவில்லை.
அபிராமிக்கு இனி குஷி தான் :
ஒரு வேலை படப்பிடிப்பு எதுவும் இல்லை என்பதால் தான் லாஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரா என்பது தெரியவில்லை. மேலும், சீசன் முடிய இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே இருப்பதால் சரி பரவாயில்லை என்று கலந்துகொள்ள சம்மதித்தாரோ என்னவோ. எது எப்படியோ லாஸ்லியா உள்ளே செல்வதால் அவரது நெருங்கிய தோழி அபிராமிக்கு கண்டிப்பாக மகிழ்ச்சி தான்.
கடந்த வாரம் தப்பித்த பாலாஜி :
இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா திடீரெண்று வெளியேறியதால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கேப்டன் தாமரை மற்றும் இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் தாடி பாலாஜி தான் குறைந்த வாக்குகள் வாங்கி வெளியேறுவதாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் யார் வெளியேறுவர் :
மேலும், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் இந்த வார டிரெண்டிங் பிளேயர் யாரும் இல்லை. இந்த வார கேப்டன் பாலாஜி முருகதாஸ் தவிர இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் தாடி பாலாஜி, சுருதி, அனிதா, ஜூலி, அபிராமி, சினேகன், தாமரை. இதில் பாலாஜி மற்றும் சினேகன் தான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனர். எனவே, இவர்கள் இருவரில் யாராவது தான் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.