வெளியே ஒரு காதலி இருக்க, அபிராமியை காதலிக்கும் பாலாஜி ? நிரூப்பிடம் போட்டு கொடுத்த வனிதா. அதுக்கு அவர் என்ன சொன்னார் பாருங்க.

0
618
vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதன் பின் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானாலும் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவருடைய படம் அமைந்தது.

-விளம்பரம்-

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி நடித்து இருந்தார். இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அபிராமி ஒரு சில படங்களில் நடித்து இருந்தார். அதோடு பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்தார். தற்போது இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்பி வருகின்றனர். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இதில் முதல் நாளே வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், வனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். மேலும், முதல் நாளே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகைபிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து நிரூப்க்கும் இவருக்கும் இடையேயான காதல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது அபிராமிக்கும், பாலாஜிக்கும் இடையே காதல் கிசுகிசு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே அபிராமி-நிரூப் குறித்து பல வதந்திகள் வெளியாகி இருந்தது. இதற்கு இரண்டு பேருமே விளக்கம் கொடுத்து இருந்தார்கள்.

அபிராமி காதலித்த நபர்கள்:

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருக்கும்போது அபிராமி, முதலில் கவினை தான் காதலித்தார். ஆனால், கவின் மாட்டவில்லை. தொடர்ந்து அபிராமி முகெனை காதலித்தார். ஆனால், முகென் நாம் இருவரும் நல்ல நண்பர் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் தான் அபிராமி-நிரூப் காதலித்தது குறித்து பல கருத்துக்கள் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே அபிராமியும் பாலாஜியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. ஆனால், அதை இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் கூறி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமிக்கும் பாலாஜிக்கும் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

பாலாஜி-அபிராமி காதல் குறித்து வனிதா கூறியது:

இந்த நிலையில் இதுகுறித்து வனிதா,நிரூப், தாடி பாலாஜி மூவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் வனிதா கூறியிருப்பது, அபிராமி உண்மையில் ஏமாளி என்று தான் சொல்லணும். யார் எது சொன்னாலும் எளிதாக நம்பி விடுகிறார். இதனால் அவளை வைத்து பல பேர் விளையாடுகிறார்கள். அதேபோல் நான் பாலாஜி பற்றியும் அபியிடம் சொல்லியிருந்தேன். ஆனால், அவள் புரிந்து கொள்ளவில்லை. ஏன்னா, நான் பாலாஜியிடம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு பின் பேசும்போது, நீதான் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றாய். எதற்காக அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறாய்? என்று நான் கேட்டேன். அதற்கு பாலாஜி நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து பணம் சம்பாதிக்கணும் என்று வந்து இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் இங்கு வந்த பின் பாலாஜி இதை நீங்கள் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார்.

பாலாஜி-அபிராமி காதல் குறித்து நிரூப் கூறியது:

இப்படி இருக்கும்போது அபியிடம் எப்படி பாலாஜி இடம் நெருக்கமாக பழக முடிகிறது? இது பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? அபிராமி உன்னிடம் ஏதாவது சொல்லியிருக்கிறாரா? என்று நிரூப் இடம் வனிதா கேட்கிறார். அதற்கு நிரூப் கூறியது, அபிராமி பாலாஜியை காதலிக்கவில்லை. அவர்கள் நண்பர்களாகத்தான் பழகி இருக்கிறார்கள். இதை நான் அபிராமி இடமே நேரடியாக கேட்டேன். அபிராமியும் இல்லை என்றுதான் மறுத்தார் என்று கூறினார். இப்படி இவர்கள் நிகழ்ச்சியில் பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

அபிராமி-நிரூப் காதல் குறித்து தாமரை கேட்டது:

அதுமட்டுமில்லாமல் அபிராமி-நிரூப் காதல் தெரிந்தவுடனே தாமரை, நிரூப்பிடம் எதனால் பிரிந்திருந்தீர்கள்? நீங்கள் சேருவீர்களா?என்று கேட்டபோது. அபிராமி தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றார். அதனால் நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன். மீண்டும் அவர் வந்து காதலிக்கிறேன் என்று சொன்னால் கூட நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். நாங்கள் நல்ல நண்பர்களாக தான் இருப்போம் என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் அபிராமி வேறு யாரை காதலித்தாலும் நிரூப்க்கு பிரச்சினையில்லை என்பது தெளிவாக தெரிகிறது. உண்மையிலேயே பாலாஜி அபிராமியை வைத்து விளையாடுகிறாரா? அபிராமி – பாலாஜி இருவரும் காதலிக்கிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement