‘அவ முன்ன மாதிரி இல்ல’ – அபிராமியுடன் இருந்த உறவு குறித்து சொல்லி நாமினேட் செய்த நிரூப். சரியான Playboy-அ இருப்பாரோ.

0
638
niroop
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்று. கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளது. கடந்த மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் முகம் தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள் தான் அதிகம் இருந்தார்கள். அதில் ஒருவர் தான் நிரூப். இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். மேலும், டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராகவும் நிரூப் வந்தார். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இவர் தனியாக விளையாடி எல்லோரிடமும் நல்ல பெயரை வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

பின் போகப்போக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்து நிரூப் வீட்டில் இருகிறாரா?என்று கேட்கும் அளவிற்கு இருந்தார். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜீவ் டைட்டில் வின்னர் ஆனார். ப்ரியங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு தற்போது விஜய் டிவி பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோக்களில் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

நிரூப் – யாஷிகா ஆனந்த் காதல்:

இதில் நிரூப் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அபிராமி, நிரூப்பின் காதலி என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த்துடன் நிரூப் காதலில் இருந்தது பிரேக் அப் ஆனது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே தெரியும். அதோடு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததே யாஷிகா ஆனந்த் மூலம் தான் என்று நிரூப்பே வெளிப்படையாக கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அபிராமியும் இவர் காதலில் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நிரூப் நாமினேட் செய்தவர்:

நேற்று பிக்பாஸ் அல்டிமேட்டில் நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்று இருக்கிறது. அதில் நிரூப் அவர்கள் அபிராமி வெங்கடாசலத்தை நாமினேட் செய்தார். பின் அதில் அவர் கூறியிருப்பது, நான் அபிராமி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போது இருந்த அபிராமி இப்போது இல்லை. அவர் நிறைய மாறி விட்டார். அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் நான் இங்க பேசவும் இல்லை. அதனால் அவரை நாமினேட் செய்கிறேன் என்று நிரூப் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

நிரூப்- அபிராமி காதல்:

இப்படி இவர் பேசிய இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் இவர் சரியான play boy போல் என்று விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், அபிராமியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். தற்போது மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி கலந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகைப்பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.

அபிராமியை நிரூப்நாமினேட் செய்தார்:

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து கமெண்ட் போட்டு இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நிரூப், அபிராமியை நாமினேடேட் செய்து இருக்கிற விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்பு நிரூப் மற்றும் அபிராமி இருவரும் ஜோடியாக கட்டிப்பிடித்து கொண்டிருக்கும் போட்டோக்கள் எல்லாம் இணையதளத்தில் வைரலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement