கடைசி நேரத்தில் ஓவியா விலக இது தான் காரணமா ? அவருக்கு பதில் கலந்துகொள்ளப் போகும் சீசன் 2 போட்டியாளர் யார் தெரியுமா ?

0
667
oviya
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக துவங்கியது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தனர்.

-விளம்பரம்-
BiggBoss

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ரசிகர்கள் சோகத்தில் இருந்த சமயத்தில் தான் ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி ஆரம்பித்து உள்ளது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள்.

- Advertisement -

முதல் நாளே களமிறங்கிய 14 போட்டியாளர்கள் :

இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். . இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 4 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். நேற்று முதல் நாள் என்பதால் மட்டும் டிவயில் ஒளிபரப்பப்பட்டது. இதில் முதல் நாளே வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.

BiggBoss

ஓவியா ஏன் வரல :

ஆனால், பிக் பாஸ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா நேற்றய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் ஏற்கனவே இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்படி ஒரு நிலையில் ஓவியாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

பேச்சு வார்த்தையில் சீசன் 2 நடிகைகள் :

அவருக்குப் பதிலாக இரண்டாம் சீசனில் தோழிகளாக வலம் வந்த இருவரில் ஒருவரை அழைக்கப் பேசி வருகிறார்களாம். அதில் இரண்டாமிடம் பிடித்தவருக்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே அவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதே போல அம்மணிக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த 16வது போட்டியாளர் யார் :

அதே போல ஏற்கனவே இந்த சீசனில் 16 பேர் கலந்துகொள்ள இருகின்றனர் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது. எனவே, ஓவியா உடல் நிலை சரியானதும் மீண்டும் பிக் பாஸில் கலந்துகொள்வாரா ? இல்லை அவருக்கு பதில் வேறு போட்டியாளர்கள் கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை. அதே போல அந்த 16 போட்டியாளர் எப்போது வைல்டு கார்டாக நுழைவார் ? அவர் யாராக இருப்பார் என்ற உங்கள் கணிப்பு என்ன ?

Advertisement