பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய முக்கிய போட்டியாளர் – இவர ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த போட்டியாளராச்சே

0
326
BiggBoss
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ரசிகர்கள் சோகத்தில் இருந்த சமயத்தில் தான் ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிவித்து உள்ளது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 4 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 30 ஆம் தேதி 6. 30 மணி துவங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். இதில் போட்டியாளர்களாக சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி ஆகியோரை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.

பிக் பாஸ் அல்டிமேட்டில் ஓவியா இல்லை:

மேலும், பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஓவியா அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என முதலில் இருந்து கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓவியா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏன்னா, ஓவியாவுக்கு தற்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர் வர வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ஓவியா ஆர்மி மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-
oviya

ஓவியா திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் ஓவியா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு மலையாளத்தில் கங்காரு என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி:

பின் 2017இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ற ஆர்மியே இவரால் தான் உருவானது. இதற்கு பிறகு இவர் பல படங்களில் கமிட்டானார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement