நான் அனுபவச்சிக்கிறேன், ஒன்னும் இல்லாத விசயத்திற்கு ஒரண்டை இழுந்த அனிதா – தன் ஸ்டைலில் கூலாக பதிலடி கொடுத்த ரம்யா.

0
618
ramya
- Advertisement -

தமிழில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 6 வாரத்தை கடந்து உள்ளது. முதல் நாளே 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். மேலும், இந்த சீசனில் ஓவியா கலந்துகொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

-விளம்பரம்-

அதே போல ஓவியாவின் என்ட்ரிக்கு தான் ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அவர் இதுவரை வெளியிடவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் அடுத்த Wild Card எண்ட்ரியாக சீசன் 3யின் ட்ரெண்டிங் பிளேயர்களில் ஒருவரான லாஸ்லியா கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

எதிர்பாராத நேரத்தில் வந்த ரம்யா :

அதே போல கடந்த வாரம் பேசிய சிம்பு, இந்த வாரம் ஒரு wild card போட்டியாளர் வரவிருக்கிறார் என்று கூறி இருந்தார். எனவே, இந்த வாரம் ஓவியா அல்லது லாஸ்லியா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் சீசன் 4ல் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் wild card போட்டியாளராக உள்ளே நுழைந்தார். உள்ளே சென்ற முதல் நாளே ரம்யா தன் ஆட்டத்தை துவங்கினார்.

ரம்யா – அனிதா வாக்குவாதம் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடந்த எபிசோட் ஒன்றில் ரம்யா பாண்டியன் மற்றும் அனிதா இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதில் ரம்யா பாண்டியன் தனது படுக்கைக்கு அருகில் செருப்பை வைக்க கூடாது என்று அனிதா கேட்க அதற்கு ரம்யா நான் ஏன் வைக்கக் கூடாது என்று கேட்டார். இப்படி தான் வனிதாவும் செய்தார் என்று அனிதா கூற, அவர் இருந்த போது நான் இல்ல அவர்களை பத்தி என்கிட்டே சொல்லாத.

-விளம்பரம்-

நான் அனுபவிச்சிக்கிறேன் :

யாரும் பண்ணக் கூடாது என்பதற்காக நானும் பண்ணக் கூடாதா என்ன என்று கேட்டார் ரம்யா. மேலும், இந்த வீட்டில் யாரும் ரூல்ஸ் பிரேக் பண்ணலயா, கேட்டன இருக்க அவர் (நிரூப்) ரூல்ஸ் பாலோ பண்ணாரா என்று ரம்யா கூற, அதற்கான பலனை அவன் அனுபவிப்பான் என்று அனிதா சொல்ல, அப்போ இதற்கான பலனை நான் அனுபவித்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார் ரம்யா.

இனி என்ன நடக்க போகுதோ :

ரம்யா பாண்டியன் மற்றும் அனிதா இருவருமே பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது. அதிலும் குறிப்பாக டாஸ்க் ஒன்றில் அனிதா சம்பத் சொந்த கதை சோக கதை எல்லாம் சொல்ல அதை கேட்ட போட்டியாளர்கள் தூங்கி வழிந்தனர். அப்போது ரம்யா பாண்டியன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். எனவே, இந்த சீசனிலும் இவர்கள் எலியும் பூனையுமாக தான் இருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது.

Advertisement