‘பேர கெடுத்துக்காதீங்க, வந்துட்டுங்க’ – wild cardஆக வந்த முன்னாள் போட்டியாளரை கண்டு புலம்பும் அவரின் ரசிகர்கள்.

0
575
- Advertisement -

தமிழில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 37 நாட்களை கடந்து உள்ளது. முதல் நாளே 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். மேலும், இந்த சீசனில் ஓவியா கலந்துகொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

-விளம்பரம்-

அதே போல ஓவியாவின் என்ட்ரிக்கு தான் ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அவர் இதுவரை வெளியிடவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் அடுத்த Wild Card எண்ட்ரியாக சீசன் 3யின் ட்ரெண்டிங் பிளேயர்களில் ஒருவரான லாஸ்லியா கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் டிரெண்டிங் பிளேயர் யாரும் இல்லை. கேப்டன் பாலாஜி முருகதாஸ் தவிர தாடி பாலாஜி, சுருதி, அனிதா, ஜூலி, அபிராமி, சினேகன், தாமரை ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் பாலாஜி மற்றும் சினேகன் தான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனர். பின் கடந்த வாரம் தாடி பாலாஜி வெளியேறி விட்டார்.

இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள்:

இதனை தொடர்ந்து ஆறாவது வாரம் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 6ஆம் வார நாமினேஷன் நடைபெற்றது. இதில் இந்த வாரம் கேப்டன் நிரூப்பை தவிர மற்ற அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர். மேலும், இந்த வாரம் நாமினேஷன் செய்யாமல் போட்டியாளர்கள் 2 பேரை காப்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் பெயரை மட்டும் சொல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி சினேகன், சுருதி, பாலாஜி, ஜூலி ஆகிய 4 பேர் மட்டுமே இந்த வாரம் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

Wild Card எண்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன் :

இந்த நிலையில் அடுத்த Wild Card எண்ட்ரி ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ரம்யா பாண்டியன் உள்ளே வருகிறார்.
லாஸ்லியா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரம்யா பாண்டியன் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளார்கள். அதோடு இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்று சொல்லும்.

ரம்யா பாண்டியன் திரைப்பயணம்:

இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் இறுதிவரை சென்றிருந்தார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிங்கப்பென் ஆகவே ரம்யா பாண்டியன் தோன்றியிருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆனால், பெருமபாலான ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கு இது தேவையில்லாத வேலை, பெயரை தான் கெடுத்துக்கொள்ள போகிறார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement