மீண்டும் என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன் – கமலின் புகைப்படத்தை பதிவிட்டு ரம்யாவின் தம்பி போட்ட பதிவு.

0
493
ramya
- Advertisement -

தமிழில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 37 நாட்களை கடந்து உள்ளது. முதல் நாளே 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். மேலும், இந்த சீசனில் ஓவியா கலந்துகொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

-விளம்பரம்-

அதே போல ஓவியாவின் என்ட்ரிக்கு தான் ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அவர் இதுவரை வெளியிடவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் அடுத்த Wild Card எண்ட்ரியாக சீசன் 3யின் ட்ரெண்டிங் பிளேயர்களில் ஒருவரான லாஸ்லியா கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

wild Cardஆக வந்த ரம்யா பாண்டியன் :

அதே போல கடந்த வாரம் பேசிய சிம்பு, இந்த வாரம் ஒரு wild card போட்டியாளர் வரவிருக்கிறார் என்று கூறி இருந்தார். எனவே, இந்த வாரம் ஓவியா அல்லது லாஸ்லியா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் சீசன் 4ல் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் wild card போட்டியாளராக உள்ளே நுழைந்தார். ரம்யா பாண்டியன் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலமே பிரபலமானார்.

ரம்யா பாண்டியன் தம்பியின் பதிவு :

அதே போல குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்தே இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இவர் டாப் 2வில் இடம்பெறவில்லை என்றாலும் இறுதி போட்டி வரை சென்றார். இப்படி ஒரு நிலையில் ரம்யா பாண்டியன் என்ட்ரி குறித்து பதிவிட்டுள்ள அவரின் தம்பி பரசு, கமலின் விக்ரம் படத்தை பதிவிட்டு ‘இந்த வாட்டி மிஸ் ஆகாது’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அடுத்த வைல்ட் கார்ட் இருக்குமா ?

இது ஒருபுறம் இருக்க ரம்யா பாண்டியன் வந்து இருப்பதால் இந்த வாரம் மற்றொரு Wild Card இருக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. அதே போல இந்த சீசன் 70 நாட்கள் மட்டும் தான் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரப்படி பிக் பாஸ் வீட்டில் 11 பேர் இருக்கின்றனர். ஆனால். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே தான் இருக்கிறது என்பதால் அடுத்த Wild Card என்ட்ரி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement