தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.
மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். மேலும், நிகழ்ச்சியில் முதலில் வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பற்றிய தகவல்:
அதே போல கமலஹாசன் அவர்கள் விக்ரம் பட சூட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியிருந்தார். இவருக்கு பதில் சில வாரங்களாகவே சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். சிம்பு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது குறித்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த வாரம் ரம்யா பாண்டியன் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தார். தற்போது சோவும் பரபரப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது. மேலும், இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கோழி முட்டையை அடைகாக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.
கோழி முட்டை டாஸ்க்:
இதனால் இதில் போட்டியாளர்கள் பல அணிகளாக பிரிந்து விளையாடி இருந்தார்கள். அப்போது போட்டியாளர்களுக்கு நடுவில் சண்டை, சச்சரவு, பிரச்சனை எல்லாம் எழுந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது ஒரு பக்கம் இருக்க, இந்த வாரத்திற்கான வாக்கெடுப்பில் ஜூலி தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. முதல் சீசனில் ஜூலியின் பெயர் பெரிய அளவில் டேமேஜ் ஆன நிலையில் தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி நன்முறையில் விளையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவில் பாலாஜி சொன்னது:
அதுமட்டுமில்லாமல் இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ் ஜூலியை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். அதில் அவர், மக்கள் உன்னை திட்டும் அளவுக்கு நீ மோசமான பெண் கிடையாது. அந்த நிலை தற்போது மாறி இருக்கிறது. உன்னை திட்டியவர்கள் எல்லாம் இனி வரவேற்பார்கள் என்று பாலாஜி சொல்ல சொல்ல ஜூலி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு நேற்று நிகழ்ச்சியில் கூட ஜூலி மயங்கி விழுந்தபோது பாலாஜி தூக்கிக்கொண்டு வந்து உதவி செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் நிகழ்ச்சியில் வெளியேறியவர்:
இதனால் ஜூலி குறித்து மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி நபர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எல்லோரும் ஜூலி வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து கே பி ஒய் சதீஷ் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதிலிருந்து இந்த வாரம் ஜூலி காப்பாற்றப்பட்டு இருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களும் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள்.