நாளை கமல் வரும் நிலையில் திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் லைவ் – என்ன காரணம்?

0
454
biggboss
- Advertisement -

திடீரென பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி லைவ் நிறுத்தப்பட்டதால் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்கள் என்னாச்சு? ஏதாச்சு? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள். முதன்முறையாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் புத்தம் புது பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ரசிகர்கள் சோகத்தில் இருந்த சமயத்தில் தான் ஒரு புது வித பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகப்படுத்தி உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. மேலும், இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இதில் பிக் பாஸ் ஒளிபரப்பி 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் தனிமைப்படத்தப்பட்ட வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை, சுரேஷ், ஷாரிக், ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.

முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் நடந்த கூத்து:

முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம், கலவரம் தொடங்கி விட்டது. பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் வனிதா ஒருத்தரை விட்டு வைக்கவில்லை புரட்டி எடுத்து வருகிறார். அதோடு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படி நிகழ்ச்சியே சூடு பிடித்து சென்று கொண்டு இருக்கும் நிலையில் கடந்த சில மணி நேரங்களாக திடீரென பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது:

தற்போது இது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியை ஸ்ட்ரீமிங் என்றால் ஒரு நாள் கழித்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் திடீரென தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதா? அல்லது பிக்பாஸ் வீட்டில் ஏதாவது சண்டை சச்சரவு நடந்து அதன் காரணமாக நிறுத்தப்பட்டதா? என்பது தெரியவில்லை. இது குறித்து தகவல் வெளியாகவும் இல்லை. அதனால் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளார்கள். இந்த நிலையில் சற்று முன் பிக்பாஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

கொந்தளிப்பில் காரணம் கேட்டு வரும் ரசிகர்கள்:

இதற்கு ரசிகர்கள் பலரும் ப்ரோமோ இருக்கட்டும் பிக் பாஸ் லைவ் நிகழ்ச்சியை ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள். அதோடு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்தாலும் பல மணி நேரங்களாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. அது சரி செய்ய வில்லையா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள். மேலும், கமலஹாசன் நாளை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதற்கு பிக்பாஸ் அல்டிமேட் குழுவினர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்கள்? கமல் என்ன சொல்லப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement