தமிழில் புது வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தை கடந்து உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பின் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ, வனிதாவின் குழாய் அடி சண்டை, நிரூப் முன்னாள் காதல், அனிதா-தாமரை-ஜூலி செய்யும் சேட்டைகள் என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நாமினேஷன்;
இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். கடந்த வாரம் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். இதில் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகிய எட்டு பேர் வெளியேறுவதற்காக நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். அதில் இருந்து முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷனும் நடந்து முடிந்து 6 பேர் வெளியேற்றுவதற்கான பட்டியலில் இருக்கிறார். பின் இரண்டாம் வாரம் தொடக்கத்தில் போலீஸ்-திருடன் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மோதி கொள்ளும் சுஜா-அனிதா :
இதில் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சில பேரால் பார்க்க முடியவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் நடக்கும் சில வீடியோக்கள் மட்டும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதா- சுஜா மோதி கொண்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அனிதா சம்பத், தாமரை இருவரும் சிறையில் தங்களுடைய நேரத்தை கழிக்கிறார்கள். சுஜா வருணி வெளியே அமர்ந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தாமரை, சுஜாவை ஏதேனும் ஒரு பாடலை பாடச் சொல்கிறார்.
சர்ச்சையான அனிதா சொன்ன வார்த்தை:
உடனே அனிதா, ஜெயில் பின்னணியை அடிப்படையாக கொண்ட ஐட்டம் பாடல்கள் இருக்கா? என்கிறார். பின் சுஜா வருணி, அனிதாவிடம் நீங்கள் கேட்டது எனக்கு புரியவில்லை. நீங்கள் ஏன் அந்த குறிப்பிட்ட வார்த்தை? சொல்கிறார்கள். அந்த பாடலில் இடம்பெறும் கலைஞர்களை குறிப்பிட்டு நீங்கள் இத்தகைய சொல்லை பயன்படுத்த தேவையில்லை. நீங்கள் அந்த வார்த்தையை பயன்படுத்த கூடாது. அவர்களுக்கும் மரியாதை இருக்கிறது. மரியாதையாக தான் சொல்லணும் என்று சொன்னவுடனே தாமரை ஐட்டம் சாங் என்று சொல்வதற்கு பதில் கிளாமர் பாடல் என்று சொல்லலாம் என்று தாமரை சொல்கிறார். உடனே சுஜாவும் அப்படித் தான் சமீபத்தில் சமந்தா ஆடியிருந்த ஊ சொல்றியா மாமா என்ற பாடல் ஐட்டம் பாடல் என்று சொல்லி விமர்சித்து இருந்தார்கள் என்று சொன்னவுடனே அனிதா பொங்கி எழுந்து,
சுஜாவிடம் வனிதா சொன்னது:
தயவு செய்து நீங்கள் இப்படி எல்லாம் பேசாதீர்கள். நான் பெண்களுக்கு எதிரானவர்கள் கிடையாது. நானே பிக் பாஸ் வீட்டில் பல முறை பெண்களுக்கு குரல் கொடுத்து பேசி இருக்கிறேன். நீங்கள் இந்த மாதிரி பேசாதீர்கள். நான் பல செய்திகளில், நடைமுறையில் எல்லோரும் சொன்ன வார்த்தை தான் பயன்படுத்தினேன். இதை நீங்கள் வேற மாதிரி கொண்டு போகிறீர்கள். தயவு செய்து இந்த பேச்சை இத்தோடு முடித்து விடுங்கள் என்று கூறுகிறார். இப்படி இவர்கள் மூவரும் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.