கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து போட்டியாளரை வெளியேற்றிய பிக் பாஸ் , அதுவும் யார் தெரியுமா ? இதான் காரணம். வீடியோ இதோ.

0
404
biggboss
- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென சுரேஷ் சக்கரவத்தி விலகி விட்டார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

பின் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரம்யா பாண்டியன் வந்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் ஜூலி இந்த சீசனில் நல்ல பெயரை எடுத்து வருவதால் அவர் இந்த வாரம் பல போக மாட்டார் என்று கூறப்பட்டது. வாக்கு படி ஜூலியை தொடர்ந்து தொடர்ந்து தாமரை மற்றும் நிரூப் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்து வந்தனர். பிறகு இதில் சதிஷ் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறியது:

உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதாவின் பெயர் தான் தொடர்ந்து டேமேஜ் ஆகி வருந்தது. பல இடங்களில் இவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது. இதுவே இவரின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது திடீரென்று அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சுரேஷ் தாத்தா. இவர் நிகழ்ச்சியில் பயங்கரமாக விளையாடி வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ்:

மேலும், இவர் தன் வயதையும் பொருட்படுத்தாமல் கடுமையாக எல்லாத்திலும் ஈடுபாடுடன் விளையாடி இருந்தார். அதே சமயம் சுரேஷ் தாத்தா பிறரை கொளுத்தி போடுவதிலும் வல்லவர். காமெடி செய்கிறேன் என்று வலுக்கட்டாயமாக வம்பிழுத்து சண்டையும் வாங்கியிருக்கிறார். மேலும், அனிதாவுக்கும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பின் இவர் சீக்கிரமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு யூடியூப் சேனலில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அதுமட்டும் இல்லாமல் பிபி ஜோடிகளில் கூட நடனம் ஆடி இருந்தார். தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் சுரேஷ் தாத்தா பங்கேற்று இருந்தார்.

-விளம்பரம்-

அல்டிமேட் நிகழ்ச்சியில் சுரேஷ் தாத்தா:

ஆனால், ஆரம்பத்தில் முதல் வாரத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிறகு மீண்டும் சுரேஷ் தாத்தா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்து இருந்தார். வழக்கம்போல் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார். கோழி முட்டை டாஸ்கில் கூட சுரேஷ் சக்கரவர்த்தி பயங்கரமாக விளையாடி இருந்தார். அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி-அனிதா இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று சுரேஷ் சக்கரவர்த்திக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் வெளியேறிய காரணம்:

நேற்று நடந்த கார் டாஸ்கில் எட்டு மணி நேரத்திற்கு மேல் விளையாடி பாலா வின் பண்ணார். அதற்குப் பிறகு தான் சுரேஷ் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இவருக்கு ஏற்கனவே உடல் பிரச்சனை இருப்பதால் ரொம்ப முடியாமல் போய்விட்டது. பின் பிக் பாஸ்ஸும் சுரேஷ் அழைத்து உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி நீங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியலாம் , உடம்பை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். பின் சசுரேஷ் தாத்தாவும் நிகழ்ச்சியை விட்டு தானே வெளியேறி இருக்கிறார். தற்போது அவருக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பையும் அவர் நல்லபடியாக தான் பயன்படுத்தி இருக்கிறார். இவருடைய விளையாட்டு திறமையை பார்த்து பலரும் பாராட்டி இருக்கிறார்கள். இவர் வெளியே குறித்து வருத்தமாக ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement