கேப்டன் வனிதா உட்பட இந்த வாரம் காப்பாற்றப்பட்ட 4 போட்டியாளர்கள் – நாமினேஷனில் இடம்பெற்ற 8 பேர்.

0
340
- Advertisement -

தமிழில் புது வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இரண்டு வாரத்தை கடந்து உள்ளது. தொலைக்காட்சி பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இதையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் வெளியானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். முதல் நாளில் இருந்தே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ, வனிதாவின் குழாய் அடி சண்டை, நிரூப் காதல், அனிதா-தாமரை-ஜூலி செய்யும் சேட்டைகள் என்று நிகழ்ச்சியே கலை காட்டுகிறது.

- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி :

அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். அதில் முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார்.அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனும் நடந்து முடிந்து 6 பேர் வெளியேற்றுவதற்கான பட்டியலில் இருந்தார்கள். இரண்டாவது வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருக்கிறார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கேப்டன் :

மேலும், சுஜா வருணி தான் அடுத்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கூட சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறும் முன் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால், கேப்டனான அடுத்த நாளே அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். அவர் வெளியேறும் முன் தன்னுடைய கேப்டன் பதவியை சினேகனுக்கு கொடுத்துவிட்டு சென்றார். அதேபோல் சுஜா வருணியின் கேப்டன் பதவி யாருக்கு கொடுத்துவிட்டு செல்லப்போகிறார்? என்று கேள்வியாக இருந்தது.

-விளம்பரம்-

மூன்றாவது வாரத்திற்கான நாமினேட்:

இந்நிலையில் இன்றைக்கான ப்ரோமோவில் கேப்டனுக்கான டாஸ்க் எல்லாம் நடந்தது. இதில் வனிதா வெற்றி பெற்று இந்த வார தலைவரானார். இந்நிலையில் மூன்றாவது வாரத்திற்கான நாமினேட் டாஸ்க் நடந்து உள்ளது. அதில் யாரைக் காப்பாற்றுவீர்கள் என்ற டைட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை ரோஸ் கொடுத்து காப்பாற்றலாம். அந்தவகையில் அதிகமாக ரோஸ் வைத்து இருப்பவர்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றபடுவார்கள். அந்த வகையில் யார், யாருக்கு ரோஸ் கொடுத்தார்கள் என்பதை பாப்போம்.

பாலாஜி – அபிராமி, நிரூப்
சினேகன் – தாமரை, தாடி பாலாஜி
நிரூப் – அனிதா, அபிராமி
தாமரை – ஷாரிக், தாடி பாலாஜி
ஜூலி – அபிநய், சுருதி
அனிதா – பாலாஜி, அபிநய்
தாடி பாலாஜி – சுருதி, சினேகன்
அபிராமி – பாலாஜி, நிரூப்
ஷாரிக் – ஜூலி, பாலாஜி
சுருதி – பாலாஜி, ஷாரிக்
அபிநய் – ஜூலி, அபிராமி
வனிதா – சுருதி, அனிதா

அந்த வகையில் குறைந்த ரோஸ் வாங்கி இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் நிரூப், சினேகன், ஜூலி, ஷாரிக், அனிதா, பாலாஜி முருகதாஸ், அபிநய், தாமரை ஆகிய 8 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் யார் இந்த வாரம் வெளியே போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement