உன் புருஷன் எப்படி என்ன சொல்லலாம் – சுஜாவிற்க்கே தெரியாத விஷயத்தை சொன்ன வனிதா. இது தான் அந்த பதிவு.

0
512
suja
- Advertisement -

சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜகுமார். இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள். இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் வேற லெவல் பிரபலமானார். அதற்கு பிறகு இவரைக் குறித்து தான் பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இது ஒரு புது வித நிகழ்ச்சி. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது.

- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் போல் இல்லாமல் 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா செய்யும் வேலை:

மேலும், முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் வனிதா சண்டை போட்டு இருக்கிறார். அதோடு பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே வனிதா கொளுத்தி போட்டு வருகிறார். இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முதல் நாளே சூடு பிடித்திருக்கிறது. இந்த நிலையில் இன்று சுஜா வருணிடம் வனிதா கோபப்பட்டு பேசி உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அப்படி என்ன காரணத்தால் சுஜாவிடம் வனிதா கோபப்பட்டார் என்றால், பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக இருந்தவர்கள் தர்ஷன்,ஷெரின்.

-விளம்பரம்-

வனிதா-தர்சன் பத்தி சுஜா கணவர் கூறியது:

இவர்கள் இருவருமே இந்த நிகழ்ச்சியின் போது நெருக்கமாக இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இப்படி இருக்கும் நிலையில் வனிதா இவர்கள் இருவரையும் பிடிக்க பார்க்கிறார். வனிதா தர்சனை அடைய பார்த்ததால் தான் இப்படி அவர்களை பிரிக்க பார்க்கிறார் என்று சுஜா வருணியின் கணவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதைப்பற்றி வனிதாவுக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் தான் சுஜாவிடம் இன்று வனிதா கோபப்பட்டு,நானும் தர்சனும் அக்கா- தம்பியாக தான் பழகினோம். இது எல்லோருக்குமே தெரியும். அதை கொச்சைப்படுத்தி உன் புருஷன் இப்படி பேசி இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சுஜாவிடம் வனிதா கோபப்பட்டு பேசியது:

அதனால் தான் உன் மீது எனக்கு கோபம் இருந்தது என்று கூறியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த சுஜா, நான் அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்ததால் சோசியல் மீடியா பக்கம் நான் வரவே இல்லை அதனால் எனக்கு அதை பற்றி தெரியதாஹு என்று கூறியுள்ளார். இப்படி சுஜாவிடம் வனிதா கூறியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு சுஜா தரப்பில் இருந்து என்ன பதில்? வரப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். சுஜாவின் கணவர் நடிகையர் திலகத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement