பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி மாற்றங்கள்.! இம்முறை இப்படி ஒரு ரூம் இருக்கு.!

0
1041
Bigg-Boss-3
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவனது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. முதல் இரண்டு சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், முதல் சீசனை போல இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனால் மூன்றாவது சீசனை சுவாரசியமாக எடுத்து செல்ல சில அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயில் ரூம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையில் ஒரே ஒரு விளக்கு மற்றும் படுக்கை மட்டுமே இருந்தது. போட்டியாளர்கள் யாரேனும் தவறு செய்து விட்டாலோ அல்லது எல்லை மீறினாலும் அவருக்கு ஜெயில் அறைக்குள் அனுப்பப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டது . ஆனால், அந்த தண்டனைகளை போட்டியாளர்கள் ஜாலியாகவே மேற்கொண்டனர்.

- Advertisement -

இதனால் இந்த வருடம் இந்த ஜெயில் அறை மிகவும் கடினமாக மாறியுள்ளது. கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டின் வெளியே இருந்த ஜெயில் அறை மிகவும் வெளிச்சம் வர கூடியதாகவும் மிகவும் காற்றோட்டமாகவும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், இம்முறை அமைக்கப்பட்டுள்ள இந்த ஜெயில் அறை பாதாள அறை போன்று அண்டர் கிரவுண்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சூரிய ஒளியோ அல்லது காற்றோ பெரிதாக கிடைக்காது.

இதுபோன்ற ஜெயில் அறை ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கொண்டுவரப்பட்டது. இந்த அறையிலும் ஒரே ஒரு விளக்கு மற்றும் ஒரே ஒரு படுக்கை மட்டுமே அமைக்கப்படும். மேலும் தேவைப்பட்டால் போட்டியாளர்களை அந்த அறைக்குள் அனுப்பி சங்கிலியால் கட்டிப்போடவும் முடியும். அதே போல இந்த அறைக்குள் செல்பவர்களிடம் மற்ற போட்டியாளர்கள் யாரும் பேசவோ அல்லது உணவளிக்கவோ கூடாது.

-விளம்பரம்-

பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க் பொறுத்து இந்த அறைக்குள் இருக்குபவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்படும். அதுமட்டுமல்லநிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்ல மேலும் இது போன்ற பல மாற்றங்களை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டுவந்துள்ளனர்.அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் முதல் வாரத்தில் எலிமினேட் ஆகிவிட்டால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 8 லட்ச ரூபாய் பணம் வழங்கப்படும்.

மேலும், நிகழ்ச்சியின் நடுவே யாரேனும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற விரும்பினால் அவர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தமும் போட்டியாளர்களிடம் போடப்பட்டுள்ளதாக இவர் தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால், அந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இருப்பினும் இந்த அண்டர் கிரவுண்ட் ஜெயில் அறை மட்டும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது என்று நம்பகரமான செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement