பார்ப்பவர்கள் முட்டாள் இல்லை.! டேனியை பற்றி வைஷ்ணவி வெளியிட்ட உண்மை.!

0
174

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வைஷ்னவி வெளியேற்றபட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி ஷாப்பிங், நண்பர்களை சந்திப்பது என்று தனது அன்றாட நடவடிக்கையில் மீண்டும் இறங்கி விட்டார். மேலும், சக போட்டியாளரான ரம்யாவை நேரில் சென்று சந்தித்து அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் வைஷ்ணவி.

daniel

அதே போல தனது முக நூல் பக்கத்தில் நேரலையில் வந்த வைஷ்ணவி ரசிகர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார். சென்றவாரம் வைஷ்ணவி நாமினேஷனில் இருந்த போது டேனியும் நாமினேஷனில் இருந்து வந்தார். ஆனால், வைஷ்ணவி எலிமினேஷனானது அவரது ரசிகர்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்வே, டேனியை பற்றி வைஷ்ணவியிடம் சில கேள்விகளை கேட்டிருந்தனர்.

அப்போது ரசிகர் ஒருவர் டேனியை பற்றி வைஷ்ணவியிடம் கேட்கையில்,’டேனி தமிழ் மொழியை பயன்படுத்தி அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து மக்களின் ஆதரவை பெற்றுவிடலாம் என்று எண்ணி வருகிறார். இந்த விடயத்தை அவரே பல முறை பிக் பாஸ் வீட்டில் சொல்லி இருக்கிறார். ஆனால், அவையெல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதா என்று தெரியவில்லை.

vaishnavi bigg bos

அதே போல டேனி,என்னை நாமினேஷன் செய்த போது நான் அவரது மொழியை குறைத்து கூறுவதாக ஒரு காரணத்தை கூறி என்னை நாமினேட் செய்திருந்தார். ஆனால், உண்மை அதுவல்ல, என்னால் டேனி பேசுவது போல தமிழில் பேச முடியாது என்று தான் கூறினேன்.நான் ஒரு போதும் தமிழ்  மொழியை அவமதிக்கவில்லை’ நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, என்று வைஷ்ணவி பதிலளித்திருந்தார்.