விஜய், அஜித் கிட்ட வாய்ப்பு கேட்டும் கிடைக்கல – புலம்பிய பிக் பாஸ் 1 நடிகர், தற்போது இந்த சீரியலில்.

0
8601
Vayapuri

சமீபகாலமாகவே மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பொழுதுபோக்கு அம்சமாக மாறி உள்ளனர். அதிலும் கொரோனா லாக் டவுனில் இருந்து திரையரங்களில் படம் எதுவும் வெளி வராத காரணத்தினால் மக்கள் அனைவரும் தொலைக்காட்சி பக்கமே சென்றுவிட்டனர். இதனால் மக்களின் ரசனைக்கு ஏற்ப தொலைக்காட்சி நிறுவனமும் புதுப்புது வித்தியாசமான கதை களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

STAR AJITH on Twitter: "Thala Ajith with Manivannan, Ramesh Kanna ...

அந்த வகையில் கலர்ஸ் தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பான தொடர் தான் அபி டெய்லர் .இந்த சீரியலில்
மதன், ரேஷ்மா ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த சீரியலில் சிறப்பு வேடத்தில் நடிகர் வையாபுரி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இவர் சீரியலில் என்ன வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் பாருங்க : 86 கிலோ டூ 63 கிலோ – வெயிட் லாஸ் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை.

- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் வையாபுரி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் மிகச் சிறந்த நகைச்சுவையாளர் ஆவார். நடிகர் வையாபுரி அவர்கள் பல மாதங்களுக்கு முன்னர், அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அளித்த பேட்டி அவர் கூறியிருப்பது, நான் நிறைய பெரிய நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கேன். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் கூட நான் நடித்து உள்ளேன். ஆனால், தற்போது நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் நான் தேடிக் கொண்டு இருக்கிறேன்.

ஒரு கலைஞன் எப்போதுமே பிஸியாக இருக்க வேண்டும். ஃப்ரீயாக இருந்தால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.சினிமாவில் இவ்வளவு ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களை மாதிரி கலைஞர்களை கண்டு கொள்வது இல்லை. விஜய், அஜித்திடம் வாய்ப்பு கேட்டு நான் சென்ற போது இதோ அடுத்த படத்தில் பண்ணிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், அதன் பின்னர் நான் கேட்பது அவர்களிடம் போய் சேருகிறதா என்று தெரியவில்லை .

-விளம்பரம்-
Watch Abhi Tailor Serial All Latest Episodes and Videos Online on MX Player

நான் 10,15 படம் நடித்த பெரிய நடிகர்கள் எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. நான் இப்ப சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து இருக்கிறேன். அவர்களே எங்களை மாதிரி கலைஞர்களை நடிக்க வைக்க யோசிக்கிறார்கள். தயவுசெய்து இருக்கும் போது தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுங்கள். இறந்த பிறகு இரங்கல் தெரிவிக்காதீர்கள். பணம், பொருள் கேட்டு வரவில்லை. நடிக்க வாய்ப்பு கேட்டு தான் வருகிறேன். அதை மனதில் கொண்டு இருங்கள் என்று உணர்ச்சி வசமாக பேட்டியளித்திருந்தார்.

Advertisement