ஜோவிகாவ மட்டும் இந்த வாரம் வெளியில் அனுப்சாங்கனா – பிக் பாஸை கிழித்த வனிதா.

0
272
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 8வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகளும் ஒருவர். வனிதாவிற்கு எந்த அளவிற்கு விமர்சனம் இருந்ததோ அதே அளவு ஜோவிகாவிற்கும் பல விமர்சனங்கள் குவிந்துகொண்டு தான் வருகிறது. அந்த வகையில் ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஜோவிகா இடம்பெற்று இருந்தார். ஆனால், விக்ரமும் இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்ததால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் முழுக்க நடைபெற்று வந்த பல்வேறு தனியார் ஓட்டிங்கில் விக்ரமை விட ஜோவிகாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவ்வாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் ஜோவிகா இந்த வாரம் வெளியேறியதாக சில நம்ப தகுந்த வட்டாரங்களில் தகவல் வெளியானது.

இப்படி ஒரு நிலையில் ஜோவிகா சீக்ரெட் ரூமில் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் பேட்டியில் பேசிய வனிதா ‘ ஜோவிகா இன்னும் வீட்டுக்கு வரவில்லை, ஒரு காலும் பண்ணவில்லை என்று பேசி இருக்கிறார். ஒருவேளை ஜோவிகா மட்டும் வெளியேறினால். அது தான் மிகவும் Unfair eviction ஆக இருக்கும். அவள் சிறந்த போட்டியாளர்களில் ஒருவர், மிகவும் கன்டென்ட் கொடுக்கக்கூடிய ஒரு போட்டியாளர்.

-விளம்பரம்-

அவர் ஒரு நேர்மையான போட்டியாளர் மட்டுமல்லாது தன்னுடைய பாயிண்டுகளையும் எடுத்து வைக்கிறார். அவர் மீது எந்த ஒரு ரெட் மார்க்கும் கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அங்கே பலர் ஒன்றுமே செய்யாமல் இருக்கும்போது பலர் ரொம்ப பண்ணும் போட்டியாளர்கள் எல்லாம் இருக்கும்போது அவர்களுக்கெல்லாம் ஓட்டு போட்டு இவளுக்கு ஓட்டு போடவில்லை என்றால் அது ஒரு ஷோவே கிடையாது.

பிக் பாஸில் இருந்து அதை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்களை வெளியில் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அதிகம் கடுப்பேற்றும் நபர்களை வெளியில் அனுப்ப வேண்டும். இந்த இரண்டு பிரிவுகளிலும் வராத ஒரு போட்டியாளரை வெளியில் அனுப்புகிறார்கள் என்றால் இதை எந்த சேனலும் பண்ணாது. அந்த ஷோ நியாயமானதாக எனக்கு படவில்லை. என்னுடைய பெண் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement