இது அவளுக்கு தேவை தான் – தனது மகள் ஜோவிகா குறித்து வனிதா சொன்ன விஷயம்.

0
455
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 62 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷ்யா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் கொடுத்த மூன்று பூகம்ப டாஸ்கில் இரண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்றதால் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உறுதியானது. அந்த வகையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா wild Card போட்டியாளர்களாக உள்ளே நுழைந்து இருக்கின்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இவர்கள் வந்த பின் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது. இந்த வாரம் நிக்ஸன் தலைவரானார். நிக்சனின் கேப்டன்சியில் யாருக்காவது அநீதி நிகழ்ந்து இருக்கும் பட்சத்தில் வீட்டில் வைத்து இருக்கும் மணி அடிக்கலாம். ஒருவேளை பெரும்பாலனோர் மணி அடிக்கும் பட்சத்தில் நிக்சனின் கேப்டன் பதிவு பறிக்கப்படுவதுடன் அவர் நேரடியாக இந்த வார நாமினேஷனில் இடம்பெறுவார் என்றும் அறிவித்து இருந்தார் பிக் பாஸ். பின் வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டில் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நாமினேட் பட்டியல்:

பின் பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேட் நடைபெற்றிருக்கிறது. அதில் தினேஷ், சரவணன் விக்ரம், ஜோவிகா, மணி, கூல் சுரேஷ், விசித்ரா, பூர்ணிமா, அனன்யா, கூல் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இதில் இந்த வாரம் சரவணன் விக்ரம் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சரவணன் தப்பித்திருக்கிறார். வனிதா மகள் ஜோவிகா தான் குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.

-விளம்பரம்-

வனிதா பேட்டி:

இந்நிலையில் இது குறித்து வனிதா பேசியிருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், உண்மையில் ஜோவிகா நிறைய குழம்பிப் போய் இருக்கிறாள். அவளுக்கு அவளைப் பற்றி வெளியே என்ன மாதிரியான கருத்துக்கள் சென்று கொண்டிருக்கிறது? நாம் வெளியே தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறோமா? அம்மா அதை எப்படி எதிர்கொண்டிருக்கிறார்? நம்முடைய சினிமா கனவு என்ன ஆவது? போன்ற பல குழப்பத்தில் இருக்கிறாள்.அந்தக் குழப்பத்தின் பிரதிபலிப்பு தான் அவள் கோபப்பட்டு அழுதது. இந்த வாரம் முழுக்க அவளுடைய மனதில் இருந்தது இதுதான்.

ஜோவிகா மாட்டிக்கிட்டா :

அதோடு ஜோவிகா, பூர்ணிமா, மாயா ஆகியோரை கேங் கேங் என்று மணியம் ரவீனாவும் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும் தான் ஒரே கேங்காக இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவள் கோபப்பட்டதுகொந்தளித்தது தேவை தான். இதை யாராவது ஒருவர் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மிகவும் பாயிண்டாக பேச கூடிய ரவீனாவிடம் இந்த பிரச்சனையை வந்தது. ஆனால், ஜோவிகா பேசுவதற்கு பாயிண்ட்டே இல்லை. உண்மையை சொல்லப்போனால் அவள் மாட்டிக் கொண்டால் என்று தான் சொல்ல வேண்டும். தினேஷும் மணியும் விடவே மாட்டார்கள். இதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள்.

Advertisement