விஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.! விஜய் செய்த விஷயம்.!

0
11613
vanitha
- Advertisement -

பிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே பேசுவேன் இது தான் வனிதாவின் லாஜிக். இதனால் ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கடும் வெறுப்பை சம்பாதித்துவந்தார்.

-விளம்பரம்-
Image result for chandralekha movie vanitha

கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

இதையும் பாருங்க : முதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.! 

- Advertisement -

இதற்கு பின்னர் ஆகாஷ் மற்றும் வனிதாவின் மகனை ஆகாஷ் தான் வளர்த்து வந்தார். அதற்கு வனிதாவின் தந்தை விஜயகுமாரும் சம்மதம் தெரிவித்ததோடு அவர் ஆகாஷ் பக்கமே நின்றார். அதன் பின்னர் ஸ்ரீஹரி, அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் தான் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல விஜயகுமாரிடம் வனிதா சண்டையிட்ட வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

Image result for chandralekha movie vanitha

வனிதா சினிமாவில் அறிமுகமானது விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் தான். அதன் பின்னர் மாணிக்கம், தேவி போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், இவர் பெரிய நடிகருடன் நடித்த படம் என்றால் அது விஜய்யுடன் மட்டும் தான்.

-விளம்பரம்-

வனிதா எந்த அளவிற்கு கர்வம் மிகுந்தவர் என்று நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்துள்ளோம். ஆனால், இதே போலத் தான் அவர் சினிமாவில் நுழையும் போதும் இருந்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

சந்திரலேகா படம் நடித்த போது வனிதாவிற்கு ஆடைகளை மாற்ற தனியாக கேரவன் எல்லாம் கிடையாதாம். இதனால் படக்குழுவினரிடம் சத்தம் போட்டுள்ளார் வனிதா. பிரச்னையை அறிந்த விஜய் தனது காருக்குள் உடை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளாராம்.

Advertisement