முதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.!

0
10577
Vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது போட்டியாளராக கடந்த வாரம் வனிதா வெளியேற்றபட்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா. வனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

இரண்டு விவாகரத்திற்கு பின்னர் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார் வனிதா. மேலும் ராபர்ட் நடித்த எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தையும் இருந்தார் வனிதா. அதன் பின்னர் நடந்த 2018 ஆம் ஆண்டு ராபர்ட்டிற்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாகவும். ஆனால், அவருக்கு விவாகரத்து கிடைக்காததால் எங்கள் திருமணம் நடக்கவில்லை என்றும் வனிதா கூறியிருந்தார்.

- Advertisement -
This image has an empty alt attribute; its file name is Rober-1024x576.jpg

ஆனால், இதனை முழுவதுமாக மறுத்த ராபர்ட், வனிதா ஏன் இவ்வாறு பொய் கூறுகிறார் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார் ராபர்ட். ஆனால், ராபர்ட் மாஸ்டர் வனிதாவின் பெயரை டாட்டூவாக குத்தியிருத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், ஆனால், ராபர்ட் மாஸ்டர் கையில் தற்போது அந்த டாட்டூ இல்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராபர்ட் ,மாஸ்டர் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், என்னை வைத்து அவர் எம் ஜி ஆர் சிவாஜி படத்தை தயாரித்தார். அதற்கு நன்றி கடனாக தான் நான் அவருடைய பெயரை டாட்டூவாக குத்தினேன். ஆனால், வனிதா தான் பப்லிசிட்டிக்காக என்னுடன் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார் என்று ராபர்ட் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-
Vanitha-Robert

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா பேசுகையில் ராபர்ட்டுடன் நான் தொடர்பில் இருந்தது உண்மை தான். யாராவது ஒருவர் மீது கொண்ட அன்பால் டாட்டூ குத்திக்கொள்வார்களா, இல்லை விளம்பரத்திற்காக ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்வார்களா. அவர் சொல்வது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது.

அவருடன் நான் தொடர்பில் இருந்தது உண்மை தான், நான் இப்போதும் அவர்கள் அம்மா அப்பாவுடன் பேசி கொண்டு தான் வருகிறேன். ஆனால், அதற்கு எல்லாம் நான் என்ன புகைப்படத்தையா ஆதாரமாக காண்பிக்க முடியும். என்னுடன் தொடர்பு இல்லை என்றால் என்னுடைய பெயரை எதற்கு பச்சை குத்தினார். சாதாரணமாக அப்படி யாரும் செய்ய மாட்டார்கள் என்று கூறியுள்ளார் வனிதா.

Advertisement