போய் 50தாவது புருஷனை தேடற வழியைப் பார் – ரஜினி குறித்து வனிதா போட்ட டீவீட்டால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
1938
- Advertisement -

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் என்று வனிதா பதிவிட்ட கருத்தால் ரசிகர்கள் சிலர் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருந்த நிலையில் படப்பிடிப்புக் குழுவில் சிலருக்கும் கொரோனா ஏற்பட்டதால் ரஜினிகும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது . இபப்டி ஒரு நிலையில் நேற்று ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுபவிக்கப்பட்டார் . மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 25) அனுமதிக்கப்பட்ட பின்னர் அப்பல்லோ மருத்துவமனை சார்பாக அறிக்கை வெளியிட்டனர்.

-விளம்பரம்-

அதில், இன்று காலை ரஜினிகாந்த் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் அவர் பங்கேற்றிருந்தார். அங்கு உடன் பணியாற்றிய சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதன் பிறகும் அவர் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது. கொரோனா நோய் அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை, என்ற போதிலும், ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் மிகுந்த மாறுபாடு காணப்படுகிறது.

இதையும் பாருங்க : சோத்துல உப்பு போட்டு தான தின்ற , திருடி ஏன் இப்படி பண்ற ? – ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து மீரா மிதுன் கொடுத்த புதிய ஷாக்.

- Advertisement -

இது பற்றி தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டியது இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு உன்னிப்பாக கவனிக்கப்படும். அவரது ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனையில் வைத்திருந்து பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் உடல்நிலை சோர்வு ஆகியவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால் வேறு முக்கியமாக உடல்நிலை விஷயத்தில் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தது.

ரஜினிகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை அடுத்து பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா ரஜினி குறித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில், ரஜினிகாந்த மாமா அவர்களுக்கு நல்ல வலிமையையும் ஆசிர் வாதத்தையும் கொடுக்க வேண்டும் என்று சர்வவல்லமையுள்ளவரிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

-விளம்பரம்-

2020 கடக்க இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கிறது. அதன் பின்னர் எல்லாம் சரியாகிவிடும். அன்புள்ள ரஜினிகாந்த் அங்கிள், நீங்கள் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட நாங்கள் விரும்பவில்லை. அதைவிட நீங்கள் எங்களுக்கு வேண்டும் என்று கூறியுள்ளார் வனிதா. வனிதாவின் இந்த கருத்தை பலர் ஏற்றாலும் ஒரு சிலரோ வனிதாவை கடிந்து வருகின்றனர். அதில் ஒருவர் உன் அக்கறைக்கு நன்றி, போய் 50தாவது புருஷனை தேடற வழியைப் பார் என்று கமன்ட் செய்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் ரஜினிகாந்த் நிலை குறித்து இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அதேநேரம் நேற்றைவிட இன்று நிலைமை முன்னேறி உள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் வேறு எந்த ஒரு கவலை தரக்கூடிய அம்சமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்று மீண்டும் அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை. ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது என்று இன்று மாலை முடிவு எடுக்கப்படும் அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி கிடையாது ம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement