அருண் விஜய்க்கு கூட பிறந்த சகோதரிகள் இவங்க ரெண்டு பேர் மட்டும் தான்.

0
33374
- Advertisement -

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார் அதற்கு வாழ்த்து தெரிவித்த வனிதா கருத்து வேறுபாடுகளை சில சமயங்களில் தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரே ரத்தம். நீங்களும், நானும் ஒன்றாகத் தான் நமது வாழ்க்கையைத் தொடங்கினோம். நமது குடும்பத்தை நாம் பெருமையடைச் செய்ய வேண்டும்.

- Advertisement -
vanitha-family

நமக்குள் இருக்கும் ஒற்றுமை தான் நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ ஐ லவ் யூ என்று பதிவிட்டிருந்தார். ஆனால், இதற்கு அருண் விஜய் ஒரு ரியாக்ஷனையும் கொடுக்கவில்லை. ஆனால், தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதனால் வனிதாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்துவந்தனர். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள வனிதா பேசுகையில் நான் செய்த தவறை எண்ணி எனது குடும்பத்தார் அனைவருக்கும் ஒரேவிதமான கடிதம் எழுதி அதனை ஈமெயில் செய்தேன்.

-விளம்பரம்-

ஆனால், அதற்காக எனக்கு எந்த பதிலும் யாரிடமும் இருந்தும் வரவில்லை. என் அம்மா இருந்த வரை நான் என் குடும்பத்தாருடன் தொடர்பில் தான் இருந்தேன். ஆனால் என் அம்மா இறந்த பிறகு என் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் கூட என்னை கண்டுகொள்வது இல்லை. எண்ணவில்லை என் அப்பா விஜயகுமார் சரி என் சகோதரரான அருண் விஜய்யும் சரி ஹீரோவாக இருந்து என்ன பிரயோஜனம் எத்தனையோ பேர் என்னை உங்கள் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ள கூறுகிறார்கள். மேலும், நான் இப்போதும் வனிதா விஜயகுமார் தான் என் மகளும் விஜயகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்பதை பெருமையாக சொல்வேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Image result for actor vijayakumar daughter kavitha
தனது இரண்டு சொந்த சகோதரிகளுடன் அருண் விஜய்

இப்படி இருக்க வனிதா விஜய்குமார் அருண் விஜய்யின் சொந்த சகோதரி இல்லை என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர். மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார்.

Advertisement