மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒன்றாக சந்திக்க போகும் வனிதா மற்றும் கஸ்தூரி.! என்ன நடக்க போகுதோ.!

0
1434
kasthuri-vanitha
- Advertisement -

பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சண்டைகளும் சர்ச்சைகளும் இருப்பது வாடிக்கையான ஒரு விஷயம்தான். பொதுவாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதுதான் போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்கள் ஏற்படும் என்றால் தற்போது சீசன் 3 கலந்துகொண்ட கஸ்தூரி மற்றும் வனிதா இருவரும் அதற்கு விதிவிலக்காக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போது வனிதாவை வாத்து வனிதா என்று குறிப்பிட்டு விட்டார் என்று வணிதாவிற்கும் இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருந்தது. ஆனால், அதன் பின்னர் இருவரும் இதை பற்றி பேசி சமாதானம் ஆகினர். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியதை குறித்து வனிதா ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார்.மேலும், இந்த வாரம் தனது ஆதரவு லாஸ்லியாவிற்கு என்றும் பதிவிட்டிருந்தார் வனிதா.

இதையும் பாருங்க : சொன்னதை போல முகேனை வலையில் சிக்க வைக்க முயற்சித்த மீரா.! கரியை பூசிய முகென்.!

அதே போல சனம் ஷெட்டி, தர்ஷனால் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்றதாக கூறியிருந்தார். ஆனால் , அது பொய்யான தகவல் என்று சனம் கூறியிருந்தார். மேலும், வனிதா, தர்ஷன் வெளியேறிதற்கு காரணம் ஷெரின் தான் என்றும் ட்வீட் செய்திருந்தார். இப்படி தொடர்ந்து வனிதா செய்து வரும் ஒரு சில ட்வீட்களுக்கு கஸ்தூரி பதிலடி கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனால் வனிதா, இனி பிக் பாஸ் பற்றி எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன் என்று பதிவிட்டார். ஆனால், வனிதாவை தொடர்ந்து தாக்கி ட்வீட் செய்து வருகிறார் கஸ்தூரி. அந்த வகையில் சமீபத்தில் வனிதாவை மீண்டும் சீண்டிய கஸ்தூரி, பொழுதுபோக்கை பற்றி உங்கள் கருத்து வக்கிரமாக இருக்கிறது. உங்கள் படத்தையாவது ஒழுங்காக எடுங்கள் என்று ட்வீட் செய்து இருந்தார். இதனால் கடுப்பான வனிதா, கொஞ்சம் நிறுத்து, உனக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை வெளியேவும் ஒன்றும் இல்லை. என்னுடைய நல்லதற்காக உன்னை நான் பிளாக் செய்கிறேன் என்று கஸ்தூரியை பிளாக் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் வனிதா.

இப்படிபட்ட நிலையில் வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். அதே போல கஸ்தூரியும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் இத்தனை நாள் ட்விட்டரில் சண்டை போட்டு வந்த இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சந்தித்தால் நிச்சயம் வாக்கு வாதம் ஏற்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர் .

ஆனால், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்வது குறித்து ட்வீட் செய்துள்ள கஸ்தூரி, கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன் என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும் இவர்கள் இருவரும் சந்தித்தால் கண்டிப்பாக ஏதாவது பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement