மல்ட்டிப்பிள் ரிலேஷன்ஷிப், லிவிங் டு கெதர் பத்திலாம் பேசினா அதுக்கு பேரு? – வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
61218
vanitha
- Advertisement -

நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரும் ஆன வனிதா பீட்டர் பால் என்பவரை கடந்த சனிக்கிழமை அதாவது 27 ஆம் தேதி தனது வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், வனிதா திருமணம் செய்துகொண்ட பீட்டருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதால் அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், வனிதாவை பலரும் விமர்சித்து வரும் நிலையில் சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிற்கு அட்வைஸ் செய்திருந்ததால், வனிதா இவரை திட்டி தீர்த்தார்.

-விளம்பரம்-
vanitha

அது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நடிகர் லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவரிடம் சமீபத்தில் நடந்த பிரச்சனையில் நீங்கள் சொன்ன கருத்துக்கு எதிர் கருத்தா நீங்கள் டிஆர்பி-க்காக சில விஷயங்கள் பண்ணதா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர் கூறியது, நான் என்ன புளூ ஃபிலிம் படமா காட்டினேன். பாவப்பட்ட மக்களுக்கு நியாயம் கேட்குற நிகழ்ச்சிதானே அது.

இதையும் பாருங்க : ஆரம்பத்தில் முடியவே முடியாது என்று சொன்ன விஜய் – ஆனால், அவரது மகன் மருத்துவமனையில் இருந்த போது.

- Advertisement -

அதில் என்ன தப்புயிருக்கு? கோட், சூட்லாம் போட்டுட்டு, ஸ்டைலா கால் மேல கால் போட்டு உட்கார்ந்து மல்ட்டிப்பிள் ரிலேஷன்ஷிப், லிவிங் டு கெதர் பத்திலாம் பேசினா அது முற்போக்கா? என்னை கேவலைபடுத்துறீங்க. சாதாரண மக்களைத் தான் கேவலப்படுத்துறீங்க. அந்த மக்கள் எங்க போவாங்க? இந்த விஷயத்தில் இன்னொரு பெண் செலிபிரிட்டி கிடையாது.

லட்சுமி ராமகிருஷ்ணன்

அவள் பாதிக்கப்பட்டிருகார். அதனால தான் நான் பேசினேன். அப்புறம் பார்த்தா அந்த செலிபிரிட்டியை கார்னர் பண்ணிட்டாங்க. மேலும், ஒரு பெண்ணை திட்டுறதுக்கு நானே காரணமாயிட்டனேன் என்று ரொம்ப வருத்தப்பட்டேன். அவங்ககிட்ட பேசி மன்னிப்பு கேட்டேன். இந்த விஷயத்துக்குள் வந்ததுக்கு என்னை நானே செருப்பாலேயே அடிச்சிக்கணும் என்று தோன்றியது. அதனால தான் ட்விட்டர் அக்கவுன்ட்டை லாக் பண்ணிட்டேன். இப்ப எடுத்துட்டேன் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement