வனிதாவை மீண்டும் சாக்கடை என்று சீண்டிய லட்சுமி ராமகிருஷ்ணன் – மறுபடியும் ஒரு பஞ்சாயத்த கூட்டிடுவாங்க போலயே.

0
2657
lakshmi
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது.

-விளம்பரம்-

இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. அதிலும் தனது திருமண விஷயத்தில் தலையிட்டதால் லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்று படு மோசமாக பேசி அசிங்கப்படுத்தினார் வனிதா. இதையடுத்து தன்னை அவதூறாக பேசி விட்டார் என்று வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணனும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதாவும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.

இதையும் பாருங்க : நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள ‘தவமாய் தவமிருந்து’ பட நடிகை பத்மபிரியா.

- Advertisement -

இந்த பிரச்சனை சென்று கொண்டே இருக்க இனி வனிதா விஷயத்தை பற்றி நான் பேசவே மாட்டேன் என்று ட்விட்டரில் கூறிவிட்டார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பின்னர் எத்தனையோ பிரச்சனைக்கு பின்னர் இந்த பிரச்சனை ஓய்ந்தது. அதே போல வினோதவால் மன வேதனை அடைந்ததாக கூறி இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த நடிகை பேசிய அருவருப்பான வார்த்தைகளால் நடிகை என்று சொல்லிக் கொள்ளவே எனக்கு வருத்தமாக இருக்கிறது.

அந்த கசப்பான நிகழ்வால் நான் மிகவும் உடைந்து போனேன். எனவே, இனி நடிக்கவே வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன. இனி இயக்குனர் பணியை மட்டுமே செய்யலாம் என்று இருக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் வனிதா மீது ஏன் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று தன்னிடம் பலர் கேட்டு வருவதாக கூறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

அதில், எஃப் ஐ ஆர், சட்டரீதியான நோட்டீஸ் கிரிமினல் குற்றச்சாட்டுகள் எல்லாம் அவருக்கு ஒன்றும் புதிதான விஷயமில்லை அவர் சட்டத்தை மதிப்பது கிடையாது எனவே இதிலெல்லாம் என்னுடைய நேரத்தை செலவு செய்யக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன் அதேசமயம் என்னுடைய கணவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். பட்ட வரைக்கும் போதும் ஏற்கனவே சாக்கடையில் கல் எறிந்து விட்டேன் இனி அதிலிருந்து நகர்ந்து செல்வது தான் நல்லது.

Advertisement