வனிதா மற்றும் பீட்டர் பால் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வனிதாவுக்கும், பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திருமணம் நடைபெற்றது. வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது பின்னர் தான் தெரிவந்தது. பீட்டர் பவுல் தனக்கு விவாகரத்து தாராமலே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்திருந்தார் அவரது முதல் மனைவி எலிசபெத். வனிதா மற்றும் பீட்டரின் திருமண செய்தியை அறிந்த பீட்டரின் மனைவி எலிசபெத் சென்னை வடபழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்அளித்திருந்தார்.
இதையடுத்து காவல் ஆய்வாளர், எலிசபெத்தின் கணவர் பீட்டர் விசாரித்துள்ளார். அப்போது தனது முதல் மனைவியான எலிசபெத்தை விவாகரத்து செய்துவிட்டு தான் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்ய இருப்பதாக எழுதி கொடுத்து சென்றுள்ளார் பீட்டர். இதையடுத்து அடுத்த சில நாளிலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டனர். ஆனால், பீட்டரின் மனைவி எலிசபெத் தனக்கு பீட்டர் எந்தவித விவாகரத்தும் அளிக்கவில்லை என்றும் காவல்நிலையத்தில் கூறி பீட்டர் பவுல் மீது புகார் அளித்து இருந்தார்.
ஆனால், எலிசபத் அளித்த புகாரின் பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தான் இருந்தது. மேலும், வனிதாவும் பீட்டர் பவுலுடன் சட்டப்படி திருமணம் முடிக்காமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுலை தான் பிரிந்துவிட்டதாக அறிவித்த வந்த பீட்டர் பவுல் மனைவியான எலிசபெத்திடம் வீடியோவில் மன்னிப்பும் கேட்டார். இப்படி ஒரு நிலையில் எலிசபத் அளித்த புகாரின் பெயரில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எலிசபத், ஏற்கனவேய வடபழனி அணைத்து மகளீர் காவல் நிலையத்திலும் மற்றும் சென்னை ஆணையர் அலுவலகத்திலும் தான்அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வனிதா மற்றும் பீட்டர் பவுல் இருவரும் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.