ஏய், வனிதா பாபா பாஸ்கர் கிட்ட வச்சிக்காத. வனிதாவை எச்சரித்த பாபா பாஸ்கர் ரசிகர்கள். ப்ரோமோ இதோ.

0
812
baba

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்ட நிலையில் இதுவரை மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா, ரித்திகா ஆகிய 4 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : ஷிவானி தனது நாய்க்கு கேக் வெட்னதுக்கே இப்படி சொல்றீங்களே – இந்த விஜய் டிவி நடிகை நாய்காக 3 நாள் உண்ணா விரதம்லா இருந்தார்களாம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் சீசன் 1 போட்டியாளர்களான வனிதா, ரம்யா பாண்டியன், ரேகா, உமா ரியாஸ் ஆகிய நால்வரும் கலந்து கொண்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவன்றாம் உமா ரியாஸை தவிர மாற்ற மூவரும் பிக் பாஸ் பிரபலங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்தின் முதல் ப்ரோமோவில் முன்னாள் குக்கு வித் கோமாளி போட்டியாளர்களும் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதில் வனிதா, உள்ளே வந்ததும் நீ டேஞ்சர்ன நான் உன்ன விட டேஞ்சர் என்று பாபா பாஸ்கரிடம் சவால் விட்டுள்ளார் வனிதா. இதை பார்த்த பாபா பாஸ்கரின் ரசிகர்கள், பாபா பாஸ்கரிடம் வச்சிக்க வேண்டாம் என்று வனிதாவை எச்சரித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement