ஷிவானி தனது நாய்க்கு கேக் வெட்னதுக்கே இப்படி சொல்றீங்களே – இந்த விஜய் டிவி நடிகை நாய்காக 3 நாள் உண்ணா விரதம்லா இருந்தார்களாம்.

0
624
sharanya
- Advertisement -

பொதுவாக வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்னவோ சாதாரண ஒரு விஷயம் தான். அதிலும் ஒரு சிலர் செல்லப் பிராணிகளை தனது வீட்டின் ஒரு குடும்ப நபர் போல தான் கவனித்து வருவார்கள். அதே போல தான் பல்வேறு நடிகர் நடிகைகள் தங்களது செல்லப் பிராணிகள் மீது பாசம் காண்பித்து வருகின்றனர். இதில் ஒரு சிலரின் பாசம் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிடுவதும் உண்டு. அந்த வகையில் சீரியல் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ஷிவானி தனது செல்லப் பிராணியின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

-விளம்பரம்-

நாய்க்குட்டிக்கு ஷிவானி கேக் வெட்டியதெல்லாம் பெரிய விஷயமில்லை. அதைவிட ஆச்சரியம் பிக்பாஸ் செல்வதற்காக க்வாரன்டைனில் இருந்தபோது அந்த நாய்க்குட்டியையும் தான் தங்கிய நட்சத்திர ஓட்டலிலேயே உடன் தங்கவைத்துக் கொண்டார் ஷிவானி. சேனல் இதற்காக இவருக்கு சிறப்பு அனுமதி வழங்கியது. தன் செல்ல நாய்க்குட்டி டைமண்டின் முதல் பிறந்த நாளை பாலா, சம்யுக்தா, ஆஜீத் உள்ளிட்ட சக நண்பர்களையெல்லாம் அழைத்து, கேக் வெட்டி கொண்டாடினார்.

இதையும் பாருங்க : 3 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் இயக்குனர் – 5 ஆண்டுகளுக்கு பின் என்ட்ரி கொடுக்கும் நதியா. ஹீரோ யார் தெரியுமா ?

- Advertisement -

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, நாய்க்கெல்லாம் இது கொஞ்சம் ஓவர் என்று பலர் விமர்சித்து இருந்தனர். ஆனால், ஷிவானியை போலவே விஜய் டிவி நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் சரண்யாவும் செல்லப்பிராணி பிரியர் தான். இவர் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்குட்டியின் பெயர் ‘பனானா'(Banana). சில ஆண்டுகளுக்கு முன் திடீரென வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது பனானா. அதனைத் தேடி முகநூலில் போஸ்ட்டரே போட்டு விட்டார். மூன்று நாட்கள் கழித்து எப்படியோ பனானா வீட்டுக்குத் திரும்பி விட்டது. அந்த மூன்று நாளும் சரண்யா சரியாகச் சாப்பிடாமல் உண்ணாவிரதம் எல்லாம் இருந்தாராம்.

தனது புதிய செல்லப் பிராணியுடன் சரண்யா

தமிழ் நடிகைகளை போல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவும் செல்லப் பிராணிகளை படு சொகுசாக கவனித்து வருகிறார். பிரியங்கா சோப்ராவை போலவே, அவரது செல்ல நாய் டயானாவும் பிரபலங்கள் லிஸ்டில் இருக்கிறது.அதுமட்டுமில்லை தனது செல்ல பிராணியாக டயானாவிற்கு இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ‘ diariesofdiana ‘(டைரிஸ் ஆஃப் டயானா) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட ஆரம்பித்துள்ளார் பிரியங்கா. இந்த பக்கத்திற்கு 3.5 ஆயிரம் பாலோயர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

-விளம்பரம்-
Advertisement