சோஷியல் மீடியாவில் சர்ச்சைக்கு பிரபலமானவராக திகழ்பவர் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, படங்களில் நடிப்பது என்று பிஸியாக இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் தனக்கு விருப்பமான உணவுகளை சமைத்து வீடியோவாக எடுத்து போட்டு வருகிறார்.
இதனால் இவருடைய யூடியூப் சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், இவர் படங்களில் பிசியாக இருப்பதால் சில மாதங்களாகவே யூடியூபில் வீடியோ எதுவும் பதிவிடாமல் இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று வனிதா சமையல் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்படி என்ன அவர் செய்திருக்கிறார் என்றால், மலபார் பீப் பிரியாணி செய்வது எப்படி என்று வீடியோ போட்டிருந்தார்.
இந்த வீடியோ குறித்து சிலர் பாராட்டினாலும், பலர் வனிதாவை திட்டி கமெண்ட் போட்டு உள்ளனர். அதில் நீங்கள் எல்லாம் இந்துவா? கருமம், நீங்கள் வெளியிட்டதிலேயே இதுதான் மோசமான வீடியோ.எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று பல்வேறு விதமாக திட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு கூலாக வனிதா பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியது, மக்களே என்னாச்சு உங்களுக்கு. என்னுடைய நட்பு வட்டத்தில் நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இருக்கின்றனர்.
இது வெறும் உணவு தான். நான் ஏழு வயதிலிருந்து அமெரிக்காவில் வளர்ந்தவள். இதனால் சிறு வயதில் இருந்தே பல நாட்டு உணவு வகைகளை சாப்பிட்டு இருக்கிறேன். நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். அதை பிறர் மீது திணிக்கக் கூடாது. இது பிடிக்கவில்லை என்றால் வீடியோவில் என் மகள் கூறியது போல் உங்களுக்கு பிடித்த மாமிசத்தையோ, காய்கறிகளையோ வைத்து இதே பிரியாணியை சமைத்து சந்தோசமாக சாப்பிடுங்கள் என்று வனிதா கூறி உள்ளார். தற்போது இவருடைய பதில் பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.