சிக்கன் டின்னர், கார் ரெய்டு. லாக்டவுனிலும் கலைக்கட்டிய பீட்டரின் பிறந்தநாள்.

0
8122
vanitha
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே வனிதா தான் சமூகவலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார் மூன்றாவது திருமண சர்ச்சைகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதா. வனிதா மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் ஆனால் அவருக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்து தான் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CDB4oK2jpsD/

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண பிரச்சனைகள் ஒருபுறம் இருந்தாலும். கடந்த சில நாட்களாக வனிதா அளித்த பேட்டியில் அவர் சொன்ன வார்த்தைகளால்வனிதாவுக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக நயன்தாரா குறித்து பேசி இருந்தது. தஞ்சாவூர் மக்கள் குறித்து சர்ச்சையான விஷயத்தை பேசி இருந்தது என்று வனிதா பல்வேறு சிக்கல்களில் சிக்கினார்.

- Advertisement -

இப்படி பல்வேறு பிரச்சினைகள் சென்று கொண்டிருக்க நேற்று (ஜூலை 24)பீட்டர் பவுல் தனது பிறந்தநாளை கொண்டாடிஇருந்தார் வனிதா. இதனால் வனிதா, வீட்டிலேயே குட்டீஸ்களுடன் பீட்டர் பவுலின் பிறந்தநாளைக் கொண்டாடியதாக புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுஇருந்தார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்று வடிவேலு கூறும் வசனம் தான் நம் நினைவிற்கு வந்தது.

இப்படி ஒரு நிலையில் பீட்டரின் பிறந்தநாளை கொண்டாட இரவு நேரத்தில் காரில் ஊரை சுற்றி மஜா பண்ணியுள்ளார் வனிதா. அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். ஊரடங்கில் அத்யாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இப்படி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வனிதா வெளியில் சுற்றுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.

-விளம்பரம்-
Advertisement