பிறந்த தேதியை காதில் கம்பலாக குத்தியுள்ள வனிதா – பீட்டருடன் 40வது பிறந்தநாள் கொண்டாட்டம்.

0
1644
vanitha
- Advertisement -

சமூக வலைதளத்தில் தற்போது வேண்டுமானால் மீரா மிதுன் ஹாட் டாபிக்காக இருந்து வந்தாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது.

- Advertisement -

இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. பின்னர் எத்தனையோ பிரச்சனைக்கு பின்னர் இந்த பிரச்சனை ஓய்ந்தது.விரைவில் சட்ட ரீதியாக பீட்டர் விவாகரத்து பெற்ற பின்னர் தங்கள் திருமணம் நடைபெறும் என்று வனிதா அறிவித்து இருந்தார். மேலும், அவ்வப்போது யூடியூபில் இணைந்து வீடியோ பகிர்ந்து வந்தார் வனிதா.

இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா,இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இதற்காக சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் கோவாவிற்கு சென்றுள்ளார் வனிதா சமீபத்தில் தான் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கோவாவில் கொண்டாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல நடிகை வனிதா கோவாவிற்கு சென்றபோது தனது காதல் தனது பிறந்த நாள் எண்ணான ஐந்து என்ற கம்பளை கூட அணிந்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement