பிகினி உடையில் பேட்டி கொடுத்தவர் தானே சனம் , ஏன் அந்த ட்ரெஸ்ஸ போடாமா உள்ள டி-ஷர்ட்ட போட்டார் – வனிதா அளித்த விளக்கத்த பாருங்க.

0
3104

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் இன் மூன்றாவது சீசன் மாற்ற 2 சீசன்களை விட மாபெரும் வெற்றி அடைந்தது. என்ன தான் கவின் லாஸ்லியா காதல் கதை ரசிகர்களை கவர்ந்தாலும் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் அதிரடியாக சென்றதற்கு காரணம் வனிதா தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே வனிதாவின் குரல் தான் பிக் பாஸில் அதிகம் ஒலித்தது. இதனால் இவருடன் சண்டை போடவே போட்டியாளர்கள் பலரும் யோசித்தனர். மேலும், இதில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களிலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கெட்ட பெயரும் ஏற்பட்டது.

இதனால் ஒரு சில வாரங்களிலேயே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா. இருப்பினும் வனிதா சென்ற பிறகு அவர் சொன்ன அத்தனையும் உண்மையாக நடந்தது இதனால் வனிதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கூடியது அதேபோல வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற பின்னர் நிகழ்ச்சியில் சுத்தமாக சுவாரஸ்யம் என்பதே இல்லாமல் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்திவரும் வனிதா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பிரத்தியேகமான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவாதித்து வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் சனம் ஷெட்டி குறித்து பேசியுள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டில் ஆடை விவகாரத்தில் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் கிடையாது. யார் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். அவ்வளவு ஏன் கடந்த சீசனில் நடிகை கஸ்தூரி பெட்ரூமில் அமர்ந்தபடி குனிந்து டீ-சர்ட்டை கழட்டி வேறு ஒரு டீ-சர்ட்டை போட்டுக் கொண்டார். அவரை சுற்றி 150 கேமரா கூட இருந்தது தெரியாமல் அவர் அப்படி செய்தார். இதனால் ஷாக்கடைந்த நான் அங்கு இருந்து வெளியில் வந்து விட்டேன். இதையெல்லாம் பிக் பாஸில் காட்ட மாட்டார்கள்.

வீடியோவில் 22 நிமிடத்தில் பார்க்கவும்

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் சனம் ஷெட்டி 3 ஆண்டுகளாக பிக் பாஸில் கலந்து கொள்ள முயற்சி செய்தார். அவர் வேல்முருகனுடன் ஆடம் போது அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த ஸ்லீவ்லெஸ் உடைக்கு மேல் அவர் ஒரு ஒயிட் டி-ஷர்ட்டை போட்டிருப்பார்கள். அவர் பிகினி உடைகளில் கூட பேட்டி கொடுத்துள்ளார். அவரு ஒரு மாடல் அதனால் அவர் உடம்பை காட்ட பயப்பட மாட்டார். ஆனால், அந்த இடத்தில் அவர் அப்படி நடந்ததற்கு காரணம் இந்த வாரத்தோட ட்ரெஸ்ஸிங் எல்லாம் ஒரு திட்டம் தான் என்பதை காட்டுகிறது என்று கூறியள்ளார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement