தன்னைத் தானே செதுக்கிய கல்கியில் வரும் பெண் போல – பீட்டருடன் சேர்ந்து வனிதா அளித்த பேட்டி.

0
3144
vanitha
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் வனிதா மற்றும் பீட்டர் பவுல் இருவரும் இணைந்து அளித்த பேட்டிக்கு பின்னர்தான் பல்வேறு பிரச்சனைகள் வெடித்தது. இப்படி ஒரு நிலையில் பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு வனிதா மற்றும் பீட்டர் பவுல் இருவரும் பேட்டி ஒன்றில் அளித்திருந்தனர். அந்த பேட்டியில் வனிதா பேசுகையில்,

-விளம்பரம்-

கல்கி என்று ஒரு படம் வந்திருக்கும் அந்த படத்தில் தன்னைத்தானே செதுக்கும் ஒரு பெண்ணின் சிலையை தான் காட்டுவார்கள். அது போலத்தான் என்னுடைய வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையின் திருப்பங்கள் இன்னும் பலமாக அடித்து அடித்து செதுக்கி விடும். அது போல பெண்ணை தான் இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பெண்ணாகத்தான் வனிதாவின் வாழ்க்கையின் துவக்கம் இருந்தது. ஆனால், அந்த தாக்கம் பல்வேறு பாதைகளில் சென்று தற்போது இந்த இடத்திற்கு வந்து நிற்கும் போது ஆரம்பத்தில் இருந்த அதே பெண்ணாக நான் இருக்க மாட்டேன்

- Advertisement -

.
இதையும் பாருங்க : இது சும்மா டிரெய்லர் தான். நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வனிதாவின் ஷாக்கிங் புகைப்படம். முழு புகைப்படம் உள்ளே.

மேலும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு பெண்ணோடு என்னை ஒப்பிட மாட்டேன். என்னை போல இந்த உலகத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் என்னை ஒப்பிடுங்கள். அவ்வளவு ஏன் அரசியலில் கூட எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு இந்திராகாந்தியாகவும் ஜெயலலிதாவும் வருவது என்ன அவ்வளவு எளிதான விஷயமா ? அவர்களும் பல்வேறு தடைகளை சந்தித்தவர்கள் தான். எனவே, வீட்டில் இருக்கும் ஒரு மனைவியோடு என்னை ஒப்பிடாதீர்கள்.

வீடியோவில் 19 : 50 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இப்படித்தான் அனைத்து பெண்களின் வாழ்க்கை இருக்கிறது. எனவே, அவர்களோடு என்னை ஒப்பிடாதீர்கள். ஏனென்றால் அப்படி ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்தது கிடையாது. ஆனால், அதுபோன்ற வாழ்க்கையை எதிர் பார்த்தது தான் நானும் என்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கை அப்படி அமையவில்லை. எனவே, என்னுடைய வாழ்க்கை பயணம் வேறு உங்களுடைய வாழ்க்கை பயணம் வேறு என்று கூறியுள்ளார் வனிதா.

Advertisement