வனிதா அடுத்த வாரமும் தொடருவாரா.! அதற்கான ஆதாரங்கள் இவை தான்.!

0
3344
Vanitha

கடந்த சில தினங்களாக காதலும் கடலையுமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவின் என்ட்ரிக்கு பின்னர் தலைகீழாக மாறிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சிறப்பு விருந்தினராகச் சென்று உள்ள வனிதா தான் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நாசுக்காக சண்டையை கிளப்பி விட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நடந்து வருகிறது.

அதே போல வனிதா சென்ற நாளில் இருந்தே வனிதா தான் பிக் பாஸ் வீட்டையே கட்டுப்பாட்டில் வைத்து வருவது போல இருந்து வருகிறார். அதிலும் இவர் தான் தற்போது பிக் பாசிர்கே ஆர்டர் போட்டு வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது நான் அப்புறம் குறும் படம் போட்டு காண்பிக்க சொல்வேன் என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : கேப்டன் போட்டியில் பித்தலாட்டம் செய்த மது.! விடியோவை பாருங்க உங்களுக்கே புரியும்.! 

- Advertisement -

அவ்வளவு ஏன் அபிராமி சிறையில் இருந்த போது சாண்டி சிறையை திறக்க சென்றார். ஆனால், அதற்கு சேரன் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின்னர் வனிதா நான் திறக்கிறேன் என்று வம்பாக சிறையை திறந்த அடுத்த நொடியே அபிராமியின் ஜெயில் தண்டனை முடிந்தது என்று அறிவித்தார் பிக் பாஸ்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது வனிதா சிறப்பு விருந்தினரா இல்லை மீண்டும் பிக் பாஸ் போட்டியாளராக வந்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் மதுமிதா கேப்டன் பதிவியை ஏற்ற பின்னர் அடுத்த வாரத்திற்கான டீம்களை அறிவித்திருந்தார். அப்போது கூகிங் டீமில் வனிதாவை கேப்டனாக அறிவித்தார் மதுமிதா.

-விளம்பரம்-

இதிலிருந்தே வனிதா அடுத்த வாரமும் தொடருவார் என்பது ஊர்ஜிதமானது. அதன் பின்னர் நேற்றய நிகழ்ச்சியின் இறுதியில் போட்டியாளர்கள் அனைவரும் ஹெலோ மெசேஜ் டாஸ்க் செய்து கொண்டிருந்த போது வனிதா ’25 நாட்களுக்கு முன்னர் எப்படி போனேனோ அப்படியே வந்துட்டேனு சொல்லு. ஐ அம் பேக்’ என்று கூறியிருந்தார். இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது வனிதா மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் பிக் பாஸ் வீட்டில் இதுவரை எந்த ஒரு சிறப்பு அழைப்பாளரும் 2 வாரம் தங்கியதே இல்லை என்பது குறிப்பிடதக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement