சமூக வலைதளத்தில் எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நபராக இருந்து வருகிறார் நடிகை வனிதா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா, வட இந்தியர் ஒருவருடன் தனது நான்காம் திருமணத்தை முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது. மேலும், அவர் ஒரு பைலட் என்றும் 3மாதத்திற்கு ஒரு முறை தான் வனிதாவை வந்து சந்தித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. மேலும், வனிதாவின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் கூட இதனை உறுதி செய்ததாக செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், அது முழுக்க முழுக்க போய் என்று செய்தி வெளியிட்ட அந்த பத்திரிக்கையையே மன்னிப்பும் கேட்க வைத்தார். அதே போல சமீபத்தில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் வனிதா பங்கேற்றார். ஆனால், இவருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : ஒரு வழியாக முதல் சொந்த காரை வாங்கிய Kpy சரத் – பாவம் எத்தனை வருட காத்திருப்பு.
இப்படி ஒரு நிலையில் வனிதாவின் மகள் தனது 16 வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அப்போது தனது மகளுக்கு லிப் லாக் கொடுத்த புகைப்படத்தை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பலர் லைக் போட்டாலும் பலர். என்ன எழவுடா இது, ? பிள்ளைகளையும் கெடுத்துவிடாதே என்று பதிவிட்டு வருகின்றனர்.
வனிதாவிற்கு அவரது மூத்த மகள் ஜோவிகா, எப்போதும் உறுதுணையாக தான் இருந்து வருகிறார். பீட்டர் பால் விவகாரத்தின் போது தனது அம்மா குறித்து பதிவிட்ட ஜோவிகா, , விவாகரத்து பரவாயில்லை, பிரேக்அப் பரவாயில்லை, அதிலிருந்து கடந்து வருவது பரவாயில்லை. ஆனால், ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருந்தால் தான் நீங்கள் மதிக்கப்படாமல் இருப்பீர்கள் என்ற ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.