விவாகரத்து குறித்தும் பிரேக்கப் குறித்தும் வனிதா மகள் போட்ட பதிவு – அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்.

0
69682
vanitha
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுல் விஷயத்தில் எண்ணற்ற பிரச்சனைகள் வெடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இதனிடையே வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி பீட்டர் அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார்.சமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-98-743x1024.jpg

இப்படி ஒரு நிலையில் வனிதா, பீட்டர் பவுலுடன் மீண்டும் இனைய ஆசைப்பட்டடதாகவும். ஆனால், அதற்கு பீட்டர் பவுல் ஒப்புக்கொள்ளாமல் வனிதாவை துரத்தி விட்டதாக சமூக வலைதளத்தில் சில செய்திகள் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள வனிதா, நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயல்வதாகவும் ஆனால் நிராகரிக்கப்பட்டதாகவும் சில ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. தயவுசெய்து இதுபோன்ற மாயைகளிலிருந்து வெளியே வாருங்கள். ஏனென்றால் என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன்.

- Advertisement -

இதற்கு முன் நான் என் உறவுகளைச் சரிசெய்ய என்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்திருக்கிறேன், பல அபத்தங்களைப் பொறுத்திருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு பொறுக்க முடியாமல் போனதால்தான் நான் அந்த உறவில் இருந்து வெளியேறினேன். என்னால் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ முடியாது. நான் அப்படிப்பட்டவள் கிடையாது. அதனால், தயவுசெய்து உங்கள் கற்பனைகளை நிறுத்துங்கள்.உறவு முறிவைப் பற்றி நான் பதிவேற்றிய கடைசி வீடியோவுக்குப் பிறகு நாங்கள் இருவரும் பேசினோம். அவர் முதிர்ச்சியடைந்தவர். அவரது முடிவை அவர் எடுத்துவிட்டார். அந்த முடிவோடு என்னால் கண்டிப்பாக வாழ முடியாது. ஆனால், முன்பு சொன்னதுபோல அவரது முன்னாள் மனைவி, குழந்தைகள் என் யாருமே அவர் வேண்டாம் என்று சொன்னதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

எனவே, இப்போது உங்களுக்கு உண்மை தெரியும். நான் முட்டாளாகவும், அப்பாவியாகவும், காதலில் மதிகெட்டும் இருந்ததால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். காதலில் என் அதிர்ஷ்டம் என்ன என்பதை நான் புரிந்து ஏற்றுக்கொண்டு விட்டேன். எனது பணி, எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். எனவே, இதற்கு மேல் யூகிப்பதை, விவாதிப்பதை நிறுத்துங்கள். அவரோடு எனக்குச் சட்டரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ எந்த ஒரு உறவும் இல்லை. நான் இப்போது உணர்ச்சியற்றுப் போயிருக்கிறேன். நான் என் வழியில் என் வலியைக் கையாள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-
vanitha

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார் வனிதா. அதில், மீண்டும் காதல், இப்போ சந்தோசமா ? என்று உமா ரியாஸ் என்ற கணக்கை டேக் செய்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதா மீண்டும் காதலில் விழுந்துவிட்டாரா என்று சந்தேகித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விவாகரத்து பரவாயில்லை, பிரேக்அப் பரவாயில்லை, அதிலிருந்து கடந்து வருவது பரவாயில்லை. ஆனால், ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருந்தால் தான் நீங்கள் மதிக்கப்படாமல் இருப்பீர்கள் என்ற ஒரு கருத்தை பதிவிடுள்ளார். வனிதாவை போல அவரது மகளும் இந்த வயதிலேயே இப்படி முதிர்ச்சியான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

Advertisement