பரபரப்பான நேரத்தில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.! எக்ஸ்க்ளுசிவ் தகவல்.!

0
16092
big-boss
- Advertisement -

கடந்த சில வாரமாக மிகவும் மந்தமாக சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றது. அதிலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட பிரீஸ் டாஸ்க் ரசிகர்களுக்கு கொஞ்சம்சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இந்த ஃப்ரீஸ்டைல் லாஸ்லியாவின் பெற்றோர்கள் உள்ளே வந்திருந்தபோது லாலியாவை அவரது தந்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய எபிசொட் சுவாரஸ்யமாகவே இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் முடிவில் கவின், வனிதா, ஷெரின்,சாண்டி, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.கடந்த திங்கள் அன்று நாமினேஷன் நடந்துமுடிந்த நாமினேஷனின் அடுத்த கணமே இந்த வாரம் வனிதா தான் வெளியேற போகிறார் என்பது அனைவரும் உறுதி செய்துவிட்டனர். இதனால் இந்த வாரம் முதலே வனிதாவிற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வந்திருந்தன.

- Advertisement -

வனிதா பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தது ரசிகர்களுக்கு மிகவும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே முன்பைப் போல தனது ராங்கி தனத்தை செய்து வந்திருந்தார். இருப்பினும் கொஞ்சம் மந்தமாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் என்ட்ரிக்கு பிறகுதான் சுவாரசியமும் பரபரப்பும் ஏற்பட்டு இருந்தது.

ஆனால் இந்த வாரம் வனிதா பேசிய சில விஷயங்கள் கொஞ்சம் நியாயமாகவே இருந்தது. இன்னும் நிகழ்ச்சி முடிய சில வாரங்களே இருக்கும் நிலையில் வனிதா இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.ஆனால், அவரை வீட்டில் வைக்க விரும்பாத ரசிகர்கள் அவரை இந்த வாரம் வழியனுப்பியுள்ளனர். அதன்படி இந்த வாரம் வனிதா வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement