தங்கி இருக்கும் அபார்ட்மெண்ட்டிலிருந்தே வனிதா மீது புகார் – மூன்று பிரிவுகளில் வழக்கு.

0
3516
vanitha
- Advertisement -

வனிதாவின் திருமண சர்ச்சை தான் கடந்த சில வாரங்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக ரவீந்திரன் கஸ்தூரி நாஞ்சில் விஜயன் லட்சுமி ராமகிருஷ்ணன் என்று பலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் வனிதாவுக்கும் லட்சுமிராமகிருஷ்ணன் இருக்கும் பெரிய சண்டையே வெடித்தது.

-விளம்பரம்-

ஒருபுறம் பலரும் வனிதாவை திட்டி தீர்த்து வந்தாலும் இன்னொரு புறமோ பீட்டர் பவுலுன் வனிதா சந்தோஷமாக இருந்து வருகிறார். சமீபத்தில் பீட்டர் பவுல் பிறந்தநாளை கொண்டாடிய வனிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் வனிதா மீது அவர் வசிக்கும் அபார்ட்மென்ட் வாசி ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : படிக்காதவன் படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது வடிவேலு தான். அறிய புகைப்படம் இதோ.

- Advertisement -

சென்னை போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் வனிதா கொரோனா காலத்தில் முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா தோட்டா காவல்நிலையத்தில் புகாரளித்தார். நிஷா தோட்டா அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் நடிகை வனிதா மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே நடிகை வனிதா மீது சூர்யா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதேபோல சமயத்தில் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் அவரது கணவர் ராமகிருஷ்ணன் சார்பாக வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் வனிதாவிற்கு பிரச்சனை தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது தவிர குறைந்தபாடில்லை. என்ன செய்ய இருக்கிறாரோ வனிதா.

-விளம்பரம்-
Advertisement