போட்டியாளர்கள் ஆடி முடித்ததும் ஜட்ஜ் மாதிரி கமன்ட் சொல்லி பல்ப் வாங்கிய வனிதா.

0
18321
vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட வனிதா, ஒருவர் கேலி செய்யப்படுவதையும் துன்புறுத்தப் படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அது என் குடும்பத்தினரும் இருந்தாலும் சரி என்பதை இந்த உலகுக்கே தெரியும் விஜய் டிவி தான் எனக்கு பல வாய்ப்புகளை கொடுத்தது இருவரும் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதும் நீடிக்கும்.ஆனால், வேலை செய்யும் இடத்தில் தொழில் முறையில்லாத நெறி முறையற்ற நடத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணவத்தால் என் வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்து, அவமானப்படுத்தி மோசமாக நடத்தினார்.

-விளம்பரம்-

கடுமையாக உழைத்து முன்னேறிய ஒரு மூத்தவர் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை தரம் தாழ்த்தி பார்ப்பது அவர்களை அவமானப் படுத்துவதை வேதனையாக உள்ளது குடும்பம் கணவர் பெற்றோர்கள் ஆதரவு இல்லாமல் ஒரு தனி பெண்ணாக மூன்று குழந்தைகளுக்கு தாயாக சாதித்துவரும் ஒரு பெண்ணை இப்படி நடத்துகிறார். ஒரு பெண் தான் இன்னோரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறி இருந்தார்.

- Advertisement -

வனிதா குறிப்பிட்ட அந்த அனுபவம் வாய்ந்த பெண் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தான் என்று பலரும் கூறத் தொடங்கிவிட்டனர் இதுகுறித்து விளக்கமளித்த ரம்யா கிருஷ்ணன், அவங்கதான் ஏதேதோ சொல்லியிருக்காங்களே… மேற்கொண்டு பிக்பாஸ் ஜோடிகள் ஷூட்டிங்ல என்ன நடந்ததுன்னு நீங்க வனிதாவையே கேளுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. மீறி இந்த விஷயம் தொடர்பா என்னுடைய கருத்து வேணும்னா, அதுக்கு நோ கமென்ட்ஸ்தான் என்று சிம்பிளாக ஒரே வார்த்தையில் கூறியுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் காதல் பாடல்களுக்கு போட்டியாளர்கள் நடனமாடினார். அப்போது நிஷா மற்றும் பாலாஜி ஆடி முடித்தவுடன் வனிதா மைக்கை எடுத்து கமன்ட் சொல்ல ஆரம்பித்துவிட்டார். வனிதா கமன்ட் சொல்லி முடித்ததும் பாலா, இந்த ஷோல யாரு ஜட்ஜ்னு தெரியல யார் யாரோ கமன்ட் சொல்ராங்க என்று சொன்னதும் ரம்யா கிருஷ்ணன் விழுந்து விழுந்து சிரித்தார். இதற்கு வனிதா, பழக்க தோஷம் ஒன்னும் பண்ண முடியாது என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement