உண்மையில் நீங்கள் வெளிநாட்டில் படிசீங்களா ? ஆதாரத்தை காட்டுங்க – ரசிகரின் கேள்விக்கு வனிதா அளித்த பதில்.

0
909
vanitha
- Advertisement -

சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாக மீராமிதுன் வேண்டுமானால் பரபரப்பாக பேசப்படும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளராக இருக்கலாம். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதாவின் மூன்றாவது திருமண விஷயம் தான். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதா ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ வெளியை தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்த வனிதா, அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மேலும் ,குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் வந்திருந்தார். வனிதா குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த வனிதா தனது சமையல் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் வனிதாவின் ரசிகர் ஒருவர் நியூசிலாந்து நாட்டில் வனிதா படித்த சமையல் கோர்ஸ் குறித்து ட்விட்டரில் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க வில்லை. நான் பேக்கிங் படிப்பை தான் படித்தேன். லண்டனில் இதற்கு பல படிப்புகள் இருக்கிறது அதை நீங்கள் விசாரித்துப் பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

வனிதாவின் இந்த பதிவவிற்கு ட்விட்டர் வாசி ஒருவர், ஆதாரமில்லாமல் எதையும் சொல்ல வேண்டாம். நான் கூடத்தான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்தை முடித்து இருக்கிறேன் என்று கூட சொல்லுவேன். ஆதாரம் வேண்டும் என்று கூறியிருந்தார். ரசிகரின் அந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள வனிதா இங்கே யாரும் யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள்ஒன்னும் என் முதலாளியோ தொழிலாளியோ கிடையாது நான் தான் என்னுடைய சொந்த முதலாளி என்று கூறியிருக்கிறார்.

வீடியோவில் 2:30 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

வனிதா, பிக் வீட்டில் இருந்த போது தனது மகளை கடத்தி வந்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார் வனிதாவின் இரண்டாவது கணவர். அப்போது பேட்டிஅளித்திருந்தார் ஆனந்த் ராஜன், வனிதாவின் ஒட்டுமொத்த குடும்பமே படிப்பறிவு இல்லாதவர் தான். வனிதா எட்டாவது கூட படிக்கல, ஸ்ரீதேவி ஐந்தாவது கூட படிக்கல, ப்ரீத்தா படிக்கல என்று கூறியிருந்தார். தற்போது பேட்டிகளில் இங்கிலிஷ்ஷில் தஸ்சு புஸ்சுனு பேசும் வனிதா வெறும் 8ஆம் வகுப்பு படிக்கல என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

Advertisement