வனிதாவுக்கு ஆதரவு தெரிவித்த குக்கு வித் கோமாளி பிரபலம் – வெளுத்து வாங்கியுள்ள ரசிகர்கள்.

0
34032
saisakthi
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா பீட்டர் பவுல் விஷயத்தில் ரசிகர்களை தாண்டி பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதில் பலர் வனிதாவுக்கு எதிராக பேசி வந்தாலும், ஒரு சில பிரபலங்கள் வனிதாவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் வனிதா பங்கேற்ற குகு வித் கோணமலி நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகர் சாய் சக்தியும் வனிதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் நடிகரான சாய்சக்தி ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் ஆனால் இடையில் இவருக்கு எந்த விதமான வாய்ப்புகளும் வரவில்லை என்றும், இதனால் மனமுடைந்த தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், தனக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து தான் இவருக்கு கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாய்சக்தி வனிதா செய்வதில் என்ன தவறு இருக்கிறது அவரை வாழ விடுங்கள் அவருக்கு என்ன செய்கிறோம் என்பது நன்றாக தெரியும் மேலும் மனித மிகவும் நல்ல மனிதர் அவருடன் நான் பழகி இருக்கிறேன் மிகவும் அன்பாகப் பேசுவார் அவர் எந்த முடிவையும் தெளிவாகத்தான் எடுப்பார் அதனால் அவரது வாழ்க்கையை வாழ விடுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால், வனிதாவிற்கு ஆதரவாக பேசியதால் ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றி வருகிறார்களாம். அதிலும் சிலரோ நீ என்ன வணிதாவிற்கு வெளக்கு புடிக்கிறயா என்றெல்லாம் கேட்கிறார்களாம். மற்றும் சிலரோ நீ ஏன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றெல்லாம் கேட்கிறார்கள் என்று புலம்பி தள்ளியுள்ளார் சாய்சக்தி.

இது ஒருபுறமிருக்க சாய் சக்திக்கும் இரண்டாம் திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது. இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறதாம். நடிகர் சாய் சக்திக்கு ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு சென்னை பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement