பிரேக்கப்பிற்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதாவை கலாய்த்த பாலா – கடும் கோபமடைந்து வாக்குவாதம் செய்த வனிதா.

0
3158
bala
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது.

-விளம்பரம்-

இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. பின்னர் எத்தனையோ பிரச்சனைக்கு பின்னர் இந்த பிரச்சனை ஓய்ந்தது. இப்படி ஒரு நிலையில் தான் வனிதா, பீட்டர் பவுலை பிரிந்ததாக அறிவித்தார். அதேபோல பீட்டர் பிரிந்த சோகத்தில் இருக்கும் வனிதா இனி கொஞ்சம் நாள் தான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் இவர் பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

- Advertisement -

என்னதான் வனிதா, பிரச்சனைகளில் சிக்கினாலும் அவரை விஜய் டிவி தொடர்ந்து ஆதரித்து வருகிறது. சமீப காலமாக விஜய் டிவியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் வனிதா தற்போது பிரேக்கப்பிற்கு பின் மீண்டும் விஜய் டீவிக்கு வந்துள்ளார். நடிகை வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார் என்பது பலரும் அறிந்த ஒன்று தான்.

பீட்டர் பாலை பிரிந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வனிதா, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் எப்போதும் போல வனிதாவை KPY பாலா கலாய்க்கிறார். ஆனால், இம்முறை கடுப்பான வனிதா, பாலாவிடம் கோபமாக பேசியுள்ளார். உண்மையில் வனிதா கோபபட்டாரா இல்லை ப்ரோமோவிற்காக இப்படி செய்துள்ளார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement