தேவயானி மீது செம்ம கோபத்தில் வனிதா விஜயகுமார் – என்ன ஆனது ? வீடியோ இதோ.

0
756
- Advertisement -

புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வனிதா என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அதுவும் முதல் எபிசோடிலேயே இவர் தேவயானி மீது செம கோபத்தில் இருக்கிறார். தற்போது அந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் கொடி கட்டி பறந்தது வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேடிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்புகளை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களுக்குள் கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறது.

-விளம்பரம்-
200 எபிசோடுகளைக் கொண்டாடும் "புது புது அர்த்தங்கள்"... ஜீ தமிழ்  தொலைக்காட்சியில் என்ன மாற்றங்கள் | Zee Tamil puthu puthu arthangal serial  crossed 200 episodes successfully ...

அந்த வகையில் மக்களின் ஃபேவரட் சீரியல் என்ற லிஸ்டில் ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. இந்த தொடர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் தேவயானி, அபிஷேக் சங்கர், வி.ஜே. பார்வதி, நியாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த தொடர் ஜீ மராத்தி தொலைக்காட்சி தொடரான ‘அக்கபாய் சாசுபாய்’ என்ற மராத்தி மொழி தொடரின் மறு ஆக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புதுப்புது அர்த்தங்கள் சீரியல்:

மேலும், இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதற்கு காரணம் சீரியலின் கதை அம்சமும், லக்ஷ்மி அம்மாவாக நடிக்கும் தேவயானியின் நடிப்பும் தான். இதற்கு முன்பு தேவையானி பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அவர் நடித்த சீரியல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக இருந்தது. குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. தற்போது இவர் மீண்டும் புது புது அர்த்தங்கள் சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்.

New Show Pudhu Pudhu Arthangal To Premiere From March 22 - Zee5 News

சீரியலில் தேவையானி ரோல்:

லக்ஷ்மி அம்மாவாக பவித்ராவுக்கு மாமியாராக தேவயானி நடிப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் தேவயானி நடிப்பில் தற்போது இந்த சீரியல் டாப் ரேடிங்கில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த சீரியலில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் என்ட்ரி கொடுக்கிறார். அதுவும் சீரியலில் அவர் நடிகை வனிதா ஆகவே நடிக்கிறார். கதைப்படி தற்போது தேவயானி பிங்க் எப்ஃப் எமில் வேலை செய்கிறார். அங்கு நேர்காணல் ஒன்றுக்காக வனிதா வருகிறார். அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது.

-விளம்பரம்-

வனிதா மாஸ் என்ட்ரி ப்ரோமோ:

அந்த கேள்விகளை எழுதி கொடுப்பவர் தேவயானி தான். எல்லா கேள்விகளும் பர்சனல் கேள்விகளாக இருக்க, கல்யாணம், விவாகரத்து பற்றியும் கேள்விகள் கேட்கிறார். இதனால் வனிதாவுக்கு கோபம் வந்து விடுகிறது. பின் இந்த கேள்வி எழுதி கொடுத்தவர் பற்றி வனிதா விசாரிக்க அது தேவையானி என்று தெரிய வருகிறது. அதன் பின்பு என்ன நடக்கும்? என்பது எபிசோடில் தான் தெரியும். அதோடு நமக்கும் என்ன நடக்கும்ன்னு தெரியும். இருந்தாலும் எபிசோடில் தான் மீதி தெரியும்.

வனிதாவின் திரைப்பயணம்:

மேலும், வனிதாவின் இந்த மாஸ் என்ட்ரி ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்ப, இந்த வாரம் புதுப்புது அர்த்தங்கள் சீரியலின் டிஆர்பி எகிற போவது உண்மை தான். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

Advertisement